Tuesday, July 9, 2013

அவருக்கு ஒன்றும் ஆகாது





ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் பாபா எங்கள் வேண்டுதலைக்கேட்டு அனுக்கிரகம் செய்வது கண்கூடான உண்மை என்பதை அனுபவத்தில் தெரிந்து வைத்திருக்கிறோம். எங்கள் வீட்டிலுள்ள போட்டோக்களில் அடிக்கடி விபூதி கொட்டுவதைப்பார்த்து பலர் ஆச்சரியப்படுவார்கள்.
அதில் மறக்க முடியாதது என் பேரன் பிரசாந்த் கல்லூரியில் சேர்ந்த விதம். அவன் தீவிரமான சாயி பக்தன். பாபா விக்ரகம் வாங்கிவந்து பூஜித்து வருகிறான். தினமும் பாபாவுக்கு உணவு தருதல், உடை மாற்றுதல், அபிஷேகித்தல் போன்றவற்றை அவன்தான் செய்வான்.
நாங்கள் குடும்பத்தோடு ஈஞ்சம்பாக்கம் கோயில் செல்வோம். வியாழன் தோறும் இருபது பாக்கெட் பிஸ்கெட் வாங்கி, ஒவ்வொரு பாக்கெட்டுடன் ஐந்து ரூபாய் நாணயம் வைத்து தானம் தருவோம்.
நாங்கள் வாங்கிச் செல்லும் சால்வையைத்தான் இரவில் பாபா அணிந்துகொள்வார் என்பது எங்கள் மேல் பாபா வைத்துள்ள கருணைக்கு சான்று.
என் பேரனை பி.ஈ. படிப்பதற்காக கல்லூரியில் சேர்க்க வேண்டியிருந்தபோது, கல்லூரி விடுதியிலும் சேர்க்க வேண்டியிருந்தது. அவன் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன் என்றால், விடுதியில் சேர்க்கத் தயங்கி பாபாவிடம் பிரார்த்தனை செய்தோம். எங்கள் பிரார்த்தனையைக் கேட்டு வீட்டுக்கு அருகிலேயே உள்ள கல்லூரியில் இடம் கிடைக்கச் செய்தார் பாபா.
என் மருமகனின் அத்தை, நான், என் மனைவி, மகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். 2013 பிப்ரவரி மாதம் இறுதியில் சாயி வரதராஜனுடன் சீரடி செல்வதற்காக பல மாதங்கள் முன்பே டிக்கெட் புக் செய்திருந்தோம். கடைசி நேரத்தில் வரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
என் மருமகனின் அத்தைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குப் போய் விட்டார். வீட்டிலிருந்த எல்லோருக்கும் அவர் பிழைப்பார் என்ற நம்பிக்கை போய்விட்டது.
கடைசி முயற்சியாக மருத்துவரை அழைத்துவந்து சிகிச்சையளிக்க நினைத்து ஒரு மருத்துவரை வீட்டுக்கு வரவழைத்து சிகிச்சைசெய்ய வைத்தோம்.. டிரிப் போட்டு மருந்து கொடுத்த டாக்டர், இன்னும் இரண்டு நாட்களில் நிச்சயமாக சரியாகி விடும், கவலைப்படாதீர்கள் என்று கூறினார்.
எங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த  ஸ்ரீநிவாசன் - விஜயலட்சுமி தம்பதியர் வருவதாக இருந்தது. பக்கத்து வீட்டினர் போகட்டும், நீங்கள் போகவேண்டாம் என என் மகள் கூறிவிட்டாள். இதனால் சீரடி யாத்திரைத் திட்டத்தைக் கைவிட தீர்மானித்திருந்தோம்.
அவருக்கு ஒன்றும் ஆகாது என்பது உறுதியான உடன், நாங்கள் சீரடிக்குப் பயணப்பட்டோம். சீரடியில் இருந்து போன் செய்து கேட்டபோது, அவர் குணடைந்துவிட்டார், இப்போது பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார் என என் மகள் தகவல் தந்தாள்.
ரயிலில் அனலாக இருந்தது. பாபா ஒரே அனலாக இருக்கிறதே, கொரூ;சம் ஏசி இருந்தால் நன்றாக இருக்குமே என மனதில் நினைத்தேன். சிறிது நேரத்தில் அங்கு வந்த டி.டி.இ, உங்கள் டிக்கெட் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏசிக்கு மாற்றப்பட்டுள்ளீர்கள், அங்கு செல்லுங்கள் என்று எங்கள் குடும்பத்தாரை அங்கு அனுப்பினார்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மீண்டும் பழைய இடத்திற்கே திருப்பி அனுப்பினார். இப்படி நிறைய அனுபவங்கள் உண்டு..
நீலா ஜெயராமன்,
மேற்கு மாம்பலம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...