என் பெயர் சுமதி. கணவர் பெயர் பரணிகுமார். காட்பாடியில்
வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிகிறார். எங்களுக்கு தேவிகா, மனோ, திவ்யா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூவரும் சாயி பாபாவிடம் அசைக்கமுடியாத
நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்கள். எது நடந்தாலும் அது பாபாவின் விருப்பம்
என்பார்கள்.
நானும் அப்படித்தான். என் பிள்ளைகள் வியாழன் தோறும்
எங்கள் பகுதியில் உள்ள செங்குட்டை பாபா கோயிலுக்குச் செல்வது வழக்கம்.
எனக்கு சில வருடங்களாக வயிற்று வலி கடுமையாக இருந்தது.
பரிசோதித்ததில் சிறுநீரகக்கற்கள் இருப்பதாகத் தெரியவந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கு
முன்பு நோயின் தீவிரம் கடுமையாக ஆனது. நேராக நிமிரக்கூட முடியவில்லை. துவண்டு
போய்விட்டேன், இப்போது அறுவை சிகிச்சைதான்
தீர்வு, வேறு வழியில்லை. செலவு இருபத்தையாயிரத்தைத்
தாண்டும் எனக் கூறினர்.
இதனால் துவண்டு போய்விட்டேன். மனக்குழப்பமும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இருந்தும் சாயியின்
பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தேன். சாயி ராம் யார் மூலமாகவோ, நேரடியாகவோ வருவார் என சாயி தரிசனம் இதழில் படித்திருக்கிறேன்.
அப்படித்தான் சாயி வரதராஜன் அவர்களிடம் இருந்து உதி பெற்றேன்.
என் வீட்டிற்கு அருகாமையில் வசிப்பவர் ஜே. சுஜாதா. என்
வேதனையைக் கண்டு அவராக வந்து, சாயி
வரதராஜனிடம் இருந்து உதி பெற்றுவந்தார். கூடவே, பாபா படம், சாயி தரிசனம் புத்தகம் கொடுத்தார். பின் எனக்காக பாபாவிடம் பிரார்த்தனை
செய்வதாகக் கூறினார்.
உதியை மருந்துடன் சேர்த்து சாப்பிடச்சொன்னார். எனக்குப்
புதுப்பொலிவு வந்தது. பாபாவை நான் பேச்சிலும், மூச்சிலும் சுவாசிக்கச் செய்தேன். பதினைந்து நாட்கள் கழித்து
ஸ்கேன் செய்து பார்த்தபோது, மருத்துவர்கள்
சிறுநீரகக் கற்கள் கரைந்திருப்பதாகச்சொன்னார்கள். அறுவைச் சிகிச்சையும் தேவையில்லை
என்றார்கள்.
சுஜாதா, உதி
கொடுக்கும்போது, உன் பிரச்சினைகள்
தீரும்போது, நம் பெருங்களத்தூர் பாபாவுக்கு
நன்றி செலுத்தி, காணிக்கையாக ரூ 2500
ஐ இடம் வாங்கத் தருவதாக பிரார்த்திக்குமாறு கூறினார்.
அதன் பேரில் அவரிடமே எனது காணிக்கையை பாபாவிடம் சேர்ப்பிக்குமாறு
கொடுத்தேன். என்னை அழைக்கும்போது நிச்சயம்
புதுப்பெருங்களத்தூர் வருவேன். நானோ காட்பாடி.
புதுப் பெருங்களத்தூரில் குடியிருக்கும் பாபா என்
கோரிக்கைக்கு செவி சாய்த்தார் என எண்ணும்போது, பாபா சர்வ வியாபி என்பதும், உதியே மருந்து என்பதும், உதி விதியை மாற்றும் என்பதும் உண்மையானது.
பி. சுமதி, செங்குட்டை, காட்பாடி
No comments:
Post a Comment