சில இடங்களில் போட்டோவிலிருந்து விபூதியும் தேனும் வழிகின்றன.
பக்தர்கள் பக்திப்பரவசத்தோடு பார்த்துவிட்டுச்செல்கிறார்கள். இது போன்ற விஷயங்கள்
சாயி பக்தர்களின் வீடுகளில் நடப்பதைப் பற்றி சாயி தரிசனம் பத்திரிகையில் எழுதலாமே!
(காயத்ரி தேவி, கும்பகோணம்)
யோகிகளின் யோக சக்திகளால் இது போன்ற விஷயங்கள் விளைவது
சகஜம். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது பலன்
தருவதில்லை. வேண்டுமானால் போட்டோக்களில் இருந்தும் காசும், பணமும் கொட்டட்டும், அதைப் பற்றி நாம் எழுதலாம், பிரமிக்கலாம். அவ்வாறு கொட்டினால் அதைப் பற்றி மூச்சுகூட
விடமாட்டார்கள். ஏனெனில் அரசாங்கம் அவர்களைப் பிடித்து விசாரணை செய்யும்.
ஒன்றுக்கும் உதவாத விஷயத்தில் கவனம் செலுத்துவதைவிட
சத்சங்கம் கேளுங்கள். அதிலிருந்து நிறைய கொட்டும்! அது உலக சுகத்தையும், ஆன்ம மேன்மையையும் தரும்.
No comments:
Post a Comment