Monday, February 13, 2017

நான் உன்னை கவனித்து கொள்கிறேன்


பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை.   "உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்"
                                                   ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
 பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்று போலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி.
உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...