Thursday, February 9, 2017

நம்பியவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஷிரடி சாய்பாபா


மும்பை பகுதியில் அமைந்த தானே என்ற பிரதேசத்தில் சோல்கர் என்றோர் அன்பர் வசித்து வந்தார். பாபாவின் பெருமைகளைக் கேள்விப்பட்ட அவர் மிகுந்த பரவசம் கொண்டார். அவர் வசதியில்லாதவர். உறவினர்கள் பலர் உள்ள பெரிய குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை. தற்காலிக ஊழியராக இருந்த அவர், இலாகா தேர்வொன்றில் வெற்றி பெற்றால் நிரந்தர ஊழியராக்கப்பட்டால், சம்பளம் உயர்ந்து வறுமை நீங்கும் என்று யோசித்தார். பாபா! நான் மட்டும் தேர்வில் வெற்றிபெற்று நிரந்தர ஊழியன் ஆகிவிட்டால் உங்களை மறக்க மாட்டேன். உங்களைத் தேடி ஷிர்டி வருவேன். உங்கள் நாமத்தைச் சொல்லி, உங்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு ஷிர்டியில் கல்கண்டு வினியோகம் செய்வேன்!

பாபாவைப் பூரணமாக நம்பிப் பிரார்த்தித்தவாறு தேர்வுக்குப் படித்து நம்பிக்கையோடு தேர்வை எழுதி முடித்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்வில் வெற்றிபெற்றார். அவரது பணி நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சம்பள விகிதம் அமல்படுத்தப்பட்டு அவர் கைக்கு வரச் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை வேண்டுதலை நிறைவேற்றக் காத்திருப்பது சரியல்ல என்று சோல்கருக்குத் தோன்றியது. ஷிர்டி செல்லப் பணம் வேண்டுமே? யோசித்து ஒரு முடிவுசெய்தார். செலவைக் குறைத்துச் சிக்கனத்தின் மூலம் பணம் சேகரிக்க சர்க்கரைக்கு ஆகும் செலவு மட்டுப்பட்டு அவரால் ஷிர்டி பயணத்திற்கான பணத்தைச் சிறிதுநாளில் சேகரிக்க முடிந்தது.
தான் சேமித்த பணத்தின் மூலம் ஷிர்டி வந்த அவர், பாபாவைப் பார்த்தது பார்த்தபடி நின்றார். மனித வடிவெடுத்த கடவுள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உள்மனம் உணர்ந்து கொண்டது. பாபாவின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பின் பாபாவின் அடியவர்கள் அனைவருக்கும் கல்கண்டு வினியோகம் செய்யலானார் சோல்கர். பாபா, திடீரென்று தம் அடியவர் ஒருவரை அழைத்தார். அதோ அங்கே என் அன்பர்களுக்குக் கல்கண்டு வினியோகம் செய்துகொண்டிருக்கிறாரே, அவருக்கு நிறையச் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள்! என்றார் பாபா! கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த வாக்கியங்களின் முழுப்பொருள் புரியவில்லை. ஆனால், புரிய வேண்டியவருக்கு அதன் உள்ளர்த்தம் முழுவதும் புரிந்தது.
தாம் ஷிர்டி வருவதற்காக சர்க்கரை கலவாத தேநீர் சாப்பிட்டு மிச்சப்படுத்தியது பற்றி பாபா அறிந்திருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்துகொண்டார். ஓடோடி வந்து பாபாவைப் பணிந்தார். அவரை இரு கைகளால் தூக்கிய பாபா பரிவோடு அவர் தலையை வருடிக் கொடுத்தார். ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்த போது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்றது. இதென்ன? கெட்ட சகுனமா நல்ல சகுனமா? என்று கேட்டார் அவர்முன் அமர்ந்திருந்த பக்தர். இரண்டுமில்லை. இந்தப் பல்லியைப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்து விட்டது. அதுதான் மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் பாபா! என்னது! பல்லிக்கு சகோதரியா? கேட்டவரின் தலை சுற்றியது. ஆனால், பாபா சொன்னபடி அந்த சகோதரிப் பல்லி ஷிர்டி வந்து சேர்ந்ததே, அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...