Tuesday, June 12, 2018

சாயியின் கிருபை!



    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால், ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு, முத­ல், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டுவிடவேண்டும். பக்தியாலும் பிரேமையாலுந்தான் அவனை அறியமுடியும்.
  சிர்டீ மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்தகாலத்தில் பழுத்து, ஸாயீ என்னும் முளை விட்டிருக்கலாம். இது சிலகாலம் கழித்து சிர்டீக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது.
விவரிக்க முடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது; ஜன்மமில்லாதது ஜன்மத்தை ஏற்றுக்கொண்டது; உருவமில்லாதது உருவெடுத்தது; கருணையின் ரஸம் மனித உருவெடுத்தது.
   புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கொடை-இந்த ஆறு மஹோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன. பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாவென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றாநிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக்கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக்கொண்டார்.
 ஆஹா! அவருடைய கிருபைதான் என்னே! பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய நிஜமான இயல்பை இறைவனே அறிவார். வாக்கின் தேவதையாகிய ஸரஸ்வதியும் சொல்லத்துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலைகுனியச் செய்தன. ஸாயீ இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே பேசினார்.
     இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது; இருப்பினும், கடமை தவறக்கூடாது என்னும் காரணத்தால் சொல்லி­யே தீரவேண்டியிருக்கிறது.
     பக்தர்களின்மீது கருணை கொண்ட ஸாயீ, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார், ”அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசா­.லி.
    , பாபா எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார். எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல். எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை. எவ்வளவு மரியாதை. பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
  என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டுவிட்டது எனில், அதைக்காது கொடுத்துக் கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்து கொள்ள வேண்டுமெனில், ஸாயீ நாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் அகன்றுவிடும்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Monday, June 11, 2018

வெற்றியுடன் நிமிர்ந்து நிம்மதியுடன் இருப்பாய்



என் அன்பு குழந்தையே, உன் மனமானது அன்னப் பறவையாய் இருக்கின்றது. அது தான் தண்ணீரையும் பாலையும் தனியே பிரித்துக் குடிக்கும். அதே போலவே தான் உன் வாழ்க்கையை நீ பார்க்கின்றாய் . துன்பத்தையும், இன்பத்தையும் பார்க்கின்றாய். ஆனால், உனக்கு தெரியுமோ, துன்பத்தில் உனக்கு நிச்சயமாக இன்பம், சிறிய அளவு பங்கு இருக்கும். அதே நேரத்தில் இன்பத்திலும் துன்பம் தோன்றும் இரண்டுமே பிரியாது. அவற்றை நீ புரிந்து கொண்டால் உன் வாழ்க்கை என்னும் கடலில் நீ சுலபமாக நீந்தி அதற்கான அர்த்தத்தை பெறலாம் அதற்கு பதிலாக நீ கடல் என்றே தெரியாமல் இருந்தால் உன் வாழ்க்கை எப்படி நெறிப்படும்? வாழ்க்கை என்பது நெறியுடன் வாழ்வது தான் அர்த்தமுள்ள உண்மையான வாழ்க்கை உனக்கு கிடைத்த இந்த அனுபவம் என்னும் பொக்கிஷ பெட்டகம் மிகப் பெரிய பரிசு. அதை உனக்கு நான் அளித்துள்ளேன்.  உன் வாழ்க்கை என்பது சமுத்திரம். அதனால் சமுத்திரத்தை உன் சாய்அப்பா உனக்காக உருவாக்கியுள்ளேன். அதில் நீ வெற்றியுடன் நிமிர்ந்து நிம்மதியுடன் இருப்பாய் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Sunday, June 10, 2018

அப்பாவின் வாக்கு



       அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் எதுவும்  அந்த இலக்கைப் போய் சோ்வதில்லை. நடந்ததையே நினைத்துக் கொண்டு இருக்காமல்நடக்கப்போவதைப்பற்றி யோசிங்கள்.
  முயற்சி என்பது ஒரு விதை மாதிரி. அதை நினைத்து விதைச்சிக்கிட்டே இருக்கணும்அதுல  சில விதைகள் வளரும், சில விதைகள் மண்ணுக்கு உரமாகிடும். இது தான் உலக நியதி...
   நடக்கும் விசயங்கள் எதுவும் நம்ம கையில் இல்லை என்றாலும், நாம் விடா முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தோம்  என்றால் நாம் கண்டிப்பாக சரியான இலக்கை அடைவோம்...
 அதை அடைவதற்க்கு அவர்கள், அவர்களுடைய கடமையை செய்வது மட்டுமே. பிரதிபலனை எதிர்பாா்க்காமல் செய்யும் கடமை "கடவுளை" நெருங்குவதற்கான ஒரு வழி ..
பொறுமையும்நம்பிக்கையும் இருந்தது என்றால் நம்ம வாழ்க்கையில் எல்லா இன்பமும் நம்மைத் தேடி வரும்..
பிரச்சனையை பார்த்து  பயந்து ஓடாதேஅந்த இறைவன் மேல் பாரத்தை போடுவரும் பிரச்சினைகள் எல்லாம் வந்த வழியிலேயே போய்விடும்....


Saturday, June 9, 2018

குரு சேவை



குரு சேவை மிகக் கடினமானது.  ஆகையால் முன்னமே நன்றாக யோசித்து குருசேவைக்கு முற்பட வேண்டும். கலியின் பிரபாவத்தால் இந்திரிய சபலம், அவதூறுகள் முதலியன வரலாம்.  ஆனால், மனதை திடப்படுத்திக் கொண்டு, ஒரே நோக்குடன் குருசேவை செய்யவேண்டும்.
குரு பக்தியினால் எல்லாமும் பெற முடியும்.  சிவனே குருவென்ற திடமான பாவனையுடன் குருவை சேவிக்க வேண்டும்.  ஜபங்கள், அனுஷ்டானங்கள் நீண்ட நாள் செய்தால்தான் பயன் பெற முடியும்.  ஆனால் குருபக்தியின் பயன் உடனே கிடைக்கும்.

தவங்கள், அனுஷ்டானங்கள், யக்ஞங்கள்,  தானங்கள் ஒரு வேளை பயனில்லாமல் போகலாம்.  ஆனால் குருபக்தி கண்டிப்பாக பயன் கொடுக்கும்.  அதுவுமில்லாமல் குருவிடம் பக்தி உள்ளவனுக்கு யக்ஞங்கள் தானங்கள் செய்த பயனும் வரும்.
குருபக்தி சுலபமானது,  கடினமில்லாதது.  ஆனால் மனதை திடப்படுத்திக் கொண்டு முழு நம்பிக்கையுடன் குருவிடம் இருக்கவேண்டும்.
ஸ்ரீகுருவிற்க்கு எவன் ஒருவன் குருபக்தியுடன் சேவை செய்வானோ அவன் வீட்டில் ஸ்ரீகுரு கல்ப விருட்சமாய் வேண்டியதை எல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பார்.
குருவை சேவிப்பவனுக்கு நரகமே இல்லாதபோது கஷ்டங்கள் எப்படி வரும்.  குரு சேவையினால் நான்கு வித புருஷார்த்தங்கள் கிடைக்கும்.  குரு சேவை செய்யும் கரங்கள், குருவை நாடி வரும் பாதங்கள்குருவை வணங்கும் சிரம் எவ்வளவோ புண்ணியம் செய்தவை.- 

Friday, June 8, 2018

உனக்கு ஏற்பட்ட வாய்ப்பு.



அன்பு குழந்தையே...

வாழ்வில் இது நடக்கும், நடக்காது என நிர்ணயிக்கப்பட்ட செயல் என்று யாராலும் கூற முடியாது.  விதி என்னும் மாயை என்னும் விளையாட்டில் நீ என்ன நான் என்ன எல்லாரும் ஒன்று தான்.  மேடும் சமமாய் போகும் சாலையும் உன் பயணங்களான வாழ்க்கையும் ஒன்று தான்.
எல்லாவற்றையும் கடந்து போகத்தான் வேண்டும். பயந்தாலும் அதே இடத்தில் நிற்க இயலாது.  செல்லும் பாதைகள் எத்தகையது என்று தீர்மானிக்க முடியாது என்றாலும் அது எப்படிப்பட்டது என உனக்கு உன் மனதில் இருந்து சரியா தவறா என்று கூறுவேன்.
உன்னால் சாதிக்க முடியும் உன் சுற்றத்தில்  ஆட்கள் இல்லை. அரவணைப்பு இல்லாதது போல் உணர்கிறாயேஉன் கண்ணீர் விழும் தருவாயில் என் கண்களில் இருந்து முதலில் வடிகிறது ,உன் மனநிலைமை கண்டு.
மனதிற்குள் புலம்பி அழுதுகொண்டும் வெளியில் சிரித்துக் கொண்டும் உனக்கு உன் முகம் நாடகமாய் நடிப்பது போன்று தோன்றி இருக்கிறது.
இது உனக்கு கஷ்டமான காலம் என்று நீ நினைக்கிறாய் ,
ஆனால் என்னை பொறுத்த வரை இது உன்னை உன்னிடம் உள்ள குறைகளை மாற்ற உனக்கு ஏற்பட்ட நல்ல பாடமாய் அமைந்த காலம் தான் இது. இதை நீ பயன்படுத்திக்கொள், உன்னை சரி செய்ய உனக்கு ஏற்பட்ட வாய்ப்பு.

Thursday, June 7, 2018

உன்னுடன் நான் இருக்கிறேன்.




மனம் தடுமாறும், முன்னே செல்ல நான்கு படிகள் ஏறினால், பின்னே இழுக்க உன் எண்ணங்கள் உன்னை குழப்பும்.  மனதை ஒருமுகப்படுத்து. உன் சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக சீர் ஆகும். உன் எண்ணங்கள் புதுமை அடையும். உன் வாழ்வில் மெல்ல மெல்ல சூரியனின் வெளிச்சம்  உதயமாகும்.

உன் எண்ணங்கள் நேர்மறையாய், ஆனால் உனக்கான நிம்மதி, சந்தோஷம் பிறக்கும். உலகத்தில் என்ன மாறினாலும், நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன். உன்னில்,  எப்போதும் நான் இருப்பேன். உன் அன்பின் ஆழத்தையும், உன் பக்தியின் தூய்மையையும், உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவன் ஆகிய நான் அறிவே.

என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ.
நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய். உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை என் இதயத்தின் கருவறையில் சுமந்து  அரவணைப்பேன்.

Wednesday, June 6, 2018

பாபாவின் சக்தி



என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும். ஆனால், அது பாபாவின் விருப்பப்படியே நடக்கும் என்ற திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருங்கள். வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அம்ருதமோ விஷமோ, இந்த இரட்டைச் சூழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டாம், அழவும் வேண்டாம். எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். பாபாவே நமது ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரே!
          நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் 
நான் நிச்சயமாக அதை தாங்குவேன்"
பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை.

Tuesday, June 5, 2018

ஜன்ம ஜன்மமாய் காப்பாற்றுவேன்


இனிமேலாவது நல்லதை நினை, நல்லதைப் பேசு, நல்லதைச் செய்.. எதிர்மறை எண்ணங்களோ, எதிர்மறைப் பேச்சுக்களோ உனது வாயிலிருந்து புறப்பட வேண்டாம்.
அவநம்பிக்கையை உண்டாக்கும் எந்தப்பேச்சுக்கும் உனது மனம் இடம் தரவேண்டாம். அனைத்தையும் செய்கிற நான் இருக்கும்போது, எல்லாம் சுபமாக நடக்கும் என நினை.. நான் அனைத்தையும் உனக்காக மாற்றுவேன்..
ஏமாற்றுவேன் என நினைக்காதே.. எனது சொற்படி நடந்தால் உனது வாழ்க்கை சொர்க்கமாக மாறும், நீ சொன்னதெல்லாம் நடக்கும். துன்பத்தின் பிடியிலிருந்து விலகியிருப்பாய்.. நானும் உனது கடவுளாக இருந்து, ஜன்ம ஜன்மமாய் காப்பாற்றுவேன்.. நேரம் வரும்போது மீண்டும் சந்திக்கிறேன்.. அதுவரை நான் சொன்னதையெல்லாம் மனதில் வைத்து பயிற்சி செய்து வா!
மங்களம் உண்டாகும்!

Monday, June 4, 2018

உன்னில் நான் இருப்பேன் இருக்கிறேன்!!!

கீரப்பாக்கம் சாயி பேராலய கும்பாபிஷேகம்


என் அன்பு குழந்தையே உன்னை நினைத்து நான் கவலைப்படுவதா அல்லது வருத்தப்படுவதாஉன் மனதில் இருக்கும் சங்கடம் ஒன்றா இரண்டா? அதை பட்டியல் இடலாம்உன் மனதிற்கு வரும் துன்பங்கள்கஷ்டங்கள் ஒரு பக்கம்மேலும் நீயாய் நினைத்து மனதில் அதை இறுத்திக் கொண்டு ஏற்படுத்திய கஷ்டங்களும், மன வலியும் ஒரு பக்கத்தில் உருவாக்கியுள்ளாய்நமது கஷ்டங்களையும் துன்பத்தையும் கண்ணில் விழுந்த தூசி போல, அதை நீ கசக்கினால் தான் உனக்கு கண்ணில் வலி ஏற்படும்அதை போலவே தான் நீ உன் துன்பத்தை மட்டுமே நினைப்பதால் தான் இன்று வரை நான் உனக்கு அளிக்கும் விஷயங்களை உன்னால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லைநீ என்னைப் பார்க்கும் போது கண்ணில் ஆனந்தமும்மனதில் வேதனையும் தெரியுதேஎன் பிள்ளையான நீ வேதனை கொள்ளலாமா உனக்கு நான் இருக்கிறேன்உன் மனம் என்பது குழந்தையின் மனதைப்போல், பளிங்கு  போல் பளிச்சென்று தெளிவாக உள்ளது ஆனால் நீயோ அதை உணராமல் தேவையில்லாத விஷயங்களை நினைத்து புலம்பி வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாய் இவ்வுலகில் தவறு செய்யாதவர்கள் என்று யாரும் இல்லை சிலர் தெரிந்து தெரியாததுமாய் செய்கிறார்கள்அவர்களுக்கான சூழ்நிலை நேரம் மற்றும் அவர்களின் வினையின் பயனால் செய்த தவறுக்கு மனவலியும் வேதனையும் அடைகிறார்கள்உன் மனதில் ஏற்படும் அனைத்திற்கும் பொறுப்பு நானேஉன் தவறை நினைத்து வருந்துகிறாய்திருத்திக்  கொள்ளவும் நினைக்கிறாய்அது அப்படியே நடக்கும்உன்னை நல்வழிப்படுத்தவே ஜென்ம ஜென்மமாய் உன் பின்தொடர்ந்து வருகிறேன். அதை நிறைவேற்றியும் தருவேன்அதனால் நீ கவலைப்படாதே, எதற்காக பயப்படுகிறாய் நான் இருக்கையில்உன்னை நிச்சயம் செம்மைப்படுத்துவேன்வாழ்க்கையில் உன் துன்பத்தை காற்றாடி போலவே தான் காற்று எந்த திசையில் இருக்கிறதோ, அந்த திசையில் தான் அது பறக்கும் அதை வேறு பக்கம் திசை திருப்ப நினைத்தால் அது பறக்காதுஅது போல் தான் உன் வாழ்க்கையும் உன் வாழ்க்கை என்னும் காற்றில் துன்பமும்சந்தோஷமும் இரண்டும் ஒரே அளவு தான் சந்தோஷத்தை ஆனந்தமாய் எடுத்து ரசிக்கிறாய்கஷ்டத்தை கண்டு ஓடுகிறாய். அதனால் தான் அது உன்னை துயரத்தில் துரத்துகிறது இரண்டுமே ஓரே அளவில் நீ நினைக்கவும் கடந்து போவதற்கும் பழகிவிட்டால் உன் வாழ்க்கை சோலைவனமாய் இருக்கும் நீ எதற்கும் பயப்படாதே யாரும் துணை இல்லை என்று நினைக்காதே, நீ நிச்சயம் வெற்றி காண்பாய் மிக விரைவில் உயர்ந்து நிற்பாய் வாழ்க்கையில், உனக்கு தாயாக தந்தையாக நான் இருக்கிறேன்உன்னில் நான் இருப்பேன் இருக்கிறேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Sunday, June 3, 2018

ஆபாந்தராத்மாவாக பாபா



பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணரவேண்டும். பாபா எங்கே போய்விட்டார்? பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும். எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! தாமோதர் ராசனேயிடம், " என்னை எண்ணிய மாத்திரத்தில், நான் வந்து விடுகிறேன் " என்றும், ஸ்ரீமதி தார்கட் அம்மையாரிடம் "தாயே! நான் எங்கும் போகவில்லை. என்னை எப்போது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்" என்றும், " என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்" என்றும் கூறிய நம் தேவனுக்கு வாரிசு என்றோ, அவருடைய மறு அவதாரமென்றோ யாராவது கூறிக் கொள்வது எங்ஙனம் தகும்?  தம்முடைய வாரிசு என்று பாபா எவரையும் குறிப்பிடவில்லை.
"பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது. கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதைபோன்றே பாபாவின் பீடமும் ! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆபாந்தராத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

Saturday, June 2, 2018

துன்பங்களுக்கான நிவாரணத்தை வழங்குவேன்...........



அன்பு குழந்தையே ! 

உன்னை தேற்றுவதற்காகவும் , உதவிகள் செய்வதற்காகவும் இதோ நான் உன்னோடுதான் இருக்கிறேன்.  இப்போது நீ மெல்ல மெல்லத் தளர்ந்து விட்டாய். வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து விட்டது. சுற்றி இருப்பவர்களை பார்த்தால் எரிச்சலும் கோபமும் வருகிறது. கர்மா என்று எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை, விதி என்று தள்ளி விடவும் முடியவில்லை என்ற பரிதவிப்பிலேயே ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகிறாய்.
என் குழந்தாய் பொறுமையாக இரு. சகித்துக்கொள் .நம்பிக்கையுடன் இரு. என்னை நம்பி சரணடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன். என் வார்த்தையை காப்பாற்ற நான் பாடுபடுவேன் . உன் மனதிலுள்ள சகல துக்கங்களும் மாறும். இதுவரை சதா காலமும் நீ துன்பத்தை நினைத்துக்கொண்டு இருந்ததால் அதன் தாக்கம் இன்றுவரை இருக்கிறது. இதை மாற்ற இனி எப்போதும் என் நாமத்தையே உச்சரித்து வா. அது உனக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் அந்த மாற்றம் உன்னை என்னிடத்திற்கு அழைத்துவரும் .அப்போது உன்னை தூக்கித் துடைத்து உனது துன்பங்களுக்கான நிவாரணத்தை வழங்குவேன்...........
--சாயியின் குரல்.

Friday, June 1, 2018

ஆம்ர லீலா (மாம்பழ அற்புதம்)


ஒருமுறை 300 நல்ல மாம்பழங்கள் கொண்ட ஒரு பார்சல் ஷீர்டிக்கு வந்தது.  அது கோவாவிலிருந்து ராலே என்ற மம்லதரால் பாபாவுக்காக ஷாமாவின் பேரில் அனுப்பப்பட்டு இருந்தது.  அது திறக்கப்பட்டதும் எல்லா மாம்பழங்களும் நன்றாக இருந்தன.  அவைகளில் நான்கை மட்டும் தமது கோலம்பாவில் வைத்துக்கொண்டு மீதியை ஷாமாவிடம் ஒப்படைத்தார்.  "இந்த நாலு பழமும் தாமு அண்ணாவுக்கு, அவைகள் இங்கேயே இருக்கட்டும்" என்றார் பாபா.

இந்த தாமு அண்ணாவுக்கு மூன்று மனைவிகள்.  முன்னரே சொல்லப்பட்ட அவருடைய வாக்குமூலத்தின்படி அவருக்கு மூன்று அல்ல, இரண்டு மனைவியர் தாம்.  அவருக்குக் குழந்தை இல்லை.  பல ஜோசியர்களைக் கலந்தும் தாமே ஜோதிடத்தை ஓரளவு கற்றும் ஒரு பாபா கிரகம் தன ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என அறிந்து கொண்டார்.  ஆனால் பாபாவிடம் அவருக்குப் பெரும் நம்பிக்கை உண்டு.  மாம்பழம் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் பாபாவை வணங்க அவர் ஷீர்டிக்குச் சென்றபோது, மற்றவர்களெல்லாம் அந்த மாம்பழத்துக்காக ஏங்கினார்களாயினும், அவை தாம்யாவினுடையதே.  யாரைச் சேரவேண்டுமோ அவர் அதை "உண்டு மரிக்கவேண்டும்" என பாபா கூறினார்.

இவ்வார்த்தைகளை முதலில் தாமு அண்ணா கேட்டபோது அதிர்ச்சி அடைந்தார்.  ஆனால் மஹல்சாபதி அவைகளை விளக்கினார்.  சாவு என்பது 'தான்' என்ற அஹங்காரச் சாவு ஆகும்.  அது பாபாவின் திருவடிகளருகில் நிகழ்வது ஓர் ஆசியேயாகும்.  மனம் தெளிந்து தாம் பழத்தை வாங்கிச் சாப்பிடுவதாகத் தாமு கேட்டுக்கொண்டார்.  ஆனால் பாபா அவரிடம், "நீயே திண்ருவிடாதே.  உனது இளைய மனைவிக்குக் கொடு.  இந்த ஆம்ரலீலா (மாம்பழ அற்புதம்) அவளுக்கு நான்கு மகன்களையும், நான்கு மகள்களையும் கொடுக்கும்".  காலப்போக்கில் பாபாவின் மொழிகளே உண்மையாயின, ஜோசியர்களுடையது அல்ல என்றும் அறியப்பட்டது.

பாபாவின் கூற்றுக்களின் திறமும், பெருமையும் அவர் வாழ்நாளில்தான் நிரூபனமாயிற்றென்றால், ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  அவர் சாமதியடைந்த பின்னும் அது மாதிரியே நிகழ்ந்தன.  "நான் இறந்து விட்டபோதிலும் என்னை நம்புங்கள்.  எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும்.  நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன் என்னுடைய சமாதியும் பேசும், கூடச் செல்லும், தொடர்புகொள்ளும்.  நான் உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள்.  எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள்.  ஆனால் என்னையே எப்போதும் நினைவு கூறுங்கள்.  உள்ளம், உயிர் இவற்றால் என்னை நம்புங்கள்.  அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்" என்றார்.
                                        சாயி சத்சரிதம் அத்தியாயம்-25

Thursday, May 31, 2018

இத்தனை சோதனைகள் ஏன் தெரியுமா?


என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையானது இனிமேல் தான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற யுகத்தில் இருக்காதே அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது அது விதி உன் வாழ்க்கையில் சில நேரம் ஆறாக அருவியாக கடலாக சீற்றங்களும் இடம்பெறும் அது ஏன் சாய்அப்பா என் வாழ்க்கையில் மட்டும் தான் நடக்குமா என்று தானே கேட்கிறாய்
என் பி்ள்ளையிடம் நிறைய நற்பண்புகள் இருக்கின்றது அது நிலைத்து என் பிள்ளை தனிச்சையாக மனஉறுதியுடன் நேர்மையுடன் இருக்கவே இத்தனை சோதனைகள் உன் பாதை என் நோக்கி என்று கிளம்ப ஆரம்பித்ததோ அன்றே நீ செம்மையான வாழ்க்கைகுள் நுழைந்து விட்டாய் இப்போது பயிற்ச்சியை தான் மேற்கொள்கிறாய் நிச்சயம் நீ முன்னேறி  வாழ்க்கையில் வெற்றி அடைவாய்  அதற்கான மாறுதல்களை உன் வாழ்க்கையில் இடம்பெறச் செய்துள்ளேன் அது உனக்கு நன்றாக புரியும் ஒன்று என் பிள்ளை அப்படி யோசிக்க மாட்டார்கள் இருந்தாலும் உன் சாய்அப்பா நான் அதனால் இ்ந்த அறிவுரை காசு என்பது வெறும் காகிதம் அது உன் உள்ளத்துக்கு நிறைவு தராது பணம் என்ற சொல் வெறும் காகித சொல் என்ற இரு அதற்கு முக்கியத்துவத்தை நீ கொடுக்காதே உன் வாழ்க்கை நானே என்னில் சங்கமித்து உள்ளது நீ நிச்சயம் நன்றாக இருப்பாய் என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை என் உயிர் நீ தான் என் செல்லமே உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னிடத்தில் இருந்து துணையாக  என் பிள்ளையான உன்னை அரவணைப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

சுகமுடன் வாழ்வாய்!



நீ உண்மையான குருபக்தன் . ஆகையால் குருச்சரித்திரத்தை கேட்கும் வாய்ப்பு உனக்குக்கிடைத்தது. மழை வருவதற்கு முன்பு ஜில்லென்ற காற்று வீசும். அதேபோல் குருவின் கருணை பெறுவதற்கு முன்பு அவர் கதையை கேட்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குரு கிருபையைப் பெற்றவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் ஏதும் இருக்காது. சத்குருவை பூஜிப்பவர்கள் கண்டிப்பாக குருவின் அருளை பூரணமாகப் பெற்று வாழ்வார்கள். ஆகையால் நீயும் குருவை நம்பிக்கையுடன், உறுதியான பக்தியுடன் சேவித்து சுகமுடன் வாழ்வாய் .
--ஸ்ரீ குரு சரித்திரம்.

Wednesday, May 30, 2018

உன்னை என் உயிராக நேசிக்கிறேன்



என் அன்பு குழந்தையே!

உனக்கு ஏன் என் மீது இவ்வளவு கோபம், உன் சாய் அப்பா உன்னைக் கஷ்டப்படுத்துவேன் என்று நீ நினைக்கிறாயா, உனக்காக எல்லாக் கஷ்டங்களையும் நான் தாங்கிக்கொள்வேன்; உன்னைச் சில நேரங்களில் நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, உன் வாழ்க்கையில் நீ மிக மெல்லிய நூலைப் போன்று இருக்கிறாய், சின்னதாக ஒரு கீரல் பட்டாலும் மனதளவில் உடைந்து போகிறாய், அப்போது உன் மனதில் தேவை இல்லாத எண்ணங்களும் சிந்தனைகளும் எழுகின்றதால் நிம்மதி இல்லை என்று புலம்புகிறாய், உன் மனதை என்னிடம் விட்டுவிட்டாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே, சில நேரம் உன் சாய் அப்பா நல்லது தான் செய்வேன் என்று உறுதியில் இருக்கிறாய், சில விஷயங்களில் அந்த உறுதியை மறந்து போகிறாய், உன் அன்பு என்பது எனக்கு என் பிள்ளை கொடுக்கின்ற பரிசு. அது உன்னிடம் உன் சாய் அப்பாக்கு நீ தினம் தோறும் நீ கொடுக்கிறாய், கொடுப்பாய், உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. விலகி போகும் படி செய்வதும் இல்லை, நான் சாய் அப்பா சொன்னதைத்தான் கேட்பேன் என்று நீ சொல்லுகையில் எனக்கு ஆனந்தம் ஏற்படும் அளவை சொல்ல வார்த்தைகள் அல்ல, அதே சமயம் உன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும், உன் நம்பிக்கை இருப்பதனால் அவர்கள் சொல்லுக்கும் நீ செவி கொடுக்கிறாய், உன் நல்லதை உன் சாய் அப்பா சிறு நிகழ்வுகளால் கிடைக்கும் பாடம், வலி என்பதில் இருந்து வாழ்க்கையும், உன் சுற்றி இருப்பவர்களும், எப்படி இருக்கிறார்கள் என்பதை உன் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உனக்கு புரிய வைக்கின்றேன். நீ அழாதே. உன் கவலையை விடு. உன் அன்பு முக்கியமானது எனக்கு அது உன்னதமானது. உண்மையானது. அதில் நீ சந்தேகம் கொள்ளாதே, உனக்கு என்ன நடந்தாலும், நீ நினைக்கின்றவர்களில், நான் உன் சாய் அப்பாதான் என்பது எனக்கு தெரியும். என் கண்ணே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன். உன் அம்மாவாக அப்பாவாக இருந்து என் கருவில் என் கையில் சுமந்து பாதுகாத்து தாங்குவேன் !!!

இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

ஆத்மார்த்தமாக அழை!



நல்லவனோ, கெட்டவனோ அதை நான் பார்ப்பதில்லை, என்னை நம்பி முழுமையாக சரண் அடைந்துவிட்டவர்களை நான் புறம் தள்ளுவதும் இல்லை. அவர்களுடைய அனைத்து விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். அவர்களைக் காப்பதே என்னுடைய வேலை. அவர்களின் நன்மை தீமைக் கணக்கைப் பார்த்து காப்பாற்றும் தன்மையுள்ளவன் அல்ல நான். அதை வேறு ஒருவன் பார்த்துக்கொள்வான். அதற்கேற்ப பலன் தருவான்.
நான் தரும் நன்மைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனது தராசுத் தட்டுக்கள் யாருக்காகவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை. அதே போல, என்னை நாற்பது ஆண்டுகள் வணங்கியவனாக இருந்தாலும் சரி, நான்கு நாட்கள் மட்டும் வணங்கியவனாக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமாக என்னை நோக்கிக் கூப்பிட்டால் உடனடியாக நான் பதில் கூறுகிறேன்.
ஸ்ரீ சாயி தரிசனம்.

Tuesday, May 29, 2018

ஸ்ரீஷிரடிசாயிநாதரின் வாக்குறுதி





நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் நீ சமர்ப்பித்தபின்னர், கவலை எதற்கு! எனது மகிமைகளைக் கண்டும் ஏன் இந்த ஏக்கம் உனக்கு.

உனது தந்தையும் நானே, தாயும் நானே, உன்னைப் படைத்ததும் நானே, உன்னை சோதிப்பதும் நானே.  உனது சோதனைக்காலம் முடிந்தபின்னர் நீ யார் என்பதை, நீ அறிந்து கொள்வதற்கு நான் தரும் சோதனைகள்தான் இப்போது நீ படும் வேதனைகள்.

நம்பிக்கையுடனும் ,பொறுமையுடனும் இரு. அதற்கான பலன்கள் விரைவில் உன்னை வந்தடையும். உனக்கான நல்ல நேரம் வரும் வரை என் மடியில் அமர்ந்து உன் கர்மாக்களை கழி. நீ தோள் சாய உன் தந்தை நானிருக்க,  ஏன் உனக்கு இந்த ஆயாசம்.

வா மகளே! மகனே! வந்து சாய்ந்து கொள். மன சஞ்சலங்களை அகற்றி அமைதி கொள். விரைவில் உன் பிரச்சனைகளை தீர்த்து உன்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கின்றேன். அது வரை எனது நாமத்தை ஜபித்து உன் கர்மாக்களை என் துணையோடு கழி.

பாபாவின் வழிகள்..



ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. பாபா பக்தர்கட்கு உபதேசம் அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரைத் தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.  
நான் என் பக்தனின் அருகிலேயே தாசனாக நின்றிருப்பேன். அவர்களின் பிரேமையே எனக்கு உணவு. அதற்காக நான் பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறேன் என சத்சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Monday, May 28, 2018

என்னிடம் முழு மனதோடு கேள்



அன்பு குழந்தையே !

 உன்னை தேடி நான் வர  போகிறேன். என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான் உனக்குத் தருவேன்.. ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு வேதனைப்படுகிறாய்.  இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல் பார்க்கலாம்? வெளியே வா.. அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால் நான் சொல்ல வில்லை  நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் வை அதன் பின்னர், நடப்பதை பார்  உன்னைப் படைத்தவன் நான், . நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்  உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது  எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு பூஜை செய்தாயோ அப்போதே நீ் செய்த கர்மபலன்கள் பொடி பொடியாகும் எனது காலடியில்.  நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும் பரிட்சை  தான் நீ படும் வேதனை உண்மையில் ஒருபோதும் நான் பணத்தை விரும்பியதில்லை விரும்பவும் எனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.  எனது பிள்ளைகளை அதன் பிடியில் விழவும் அனுமதிக்கமாட்டேன் ஆனால்  உனக்கு அது தேவைபடும் காலகட்டத்தில்  அது உன்னை தேடி வரும் யாருக்கும் இல்லை என்று சொல்லாதே யாரையும் வெறுத்து ஒதுக்காதே உன்னை தேடி அப்பா நான் வர போகிறேன். உன்னை  பாதுகாப்பேன்.."!

உன்னை பாதுகாப்பேன்



அன்பு குழந்தையே !

 உன்னை தேடி நான் வர  போகிறேன். என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான் உனக்குத் தருவேன்.. ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு வேதனைப்படுகிறாய்.  இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல் பார்க்கலாம்? வெளியே வா.. அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால் நான் சொல்ல வில்லை  நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் வை அதன் பின்னர், நடப்பதை பார்  உன்னைப் படைத்தவன் நான், . நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்  உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது  எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு பூஜை செய்தாயோ அப்போதே நீ் செய்த கர்மபலன்கள் பொடி பொடியாகும் எனது காலடியில்.  நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும் பரிட்சை  தான் நீ படும் வேதனை உண்மையில் ஒருபோதும் நான் பணத்தை விரும்பியதில்லை விரும்பவும் எனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.  எனது பிள்ளைகளை அதன் பிடியில் விழவும் அனுமதிக்கமாட்டேன் ஆனால்  உனக்கு அது தேவைபடும் காலகட்டத்தில்  அது உன்னை தேடி வரும் யாருக்கும் இல்லை என்று சொல்லாதே யாரையும் வெறுத்து ஒதுக்காதே உன்னை தேடி அப்பா நான் வர போகிறேன். உன்னை  பாதுகாப்பேன்.."!                       

Sunday, May 27, 2018

பொறாமையை வென்றுவிடு.


பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ, செல்வாக்கோ கிட்டி விட்டால், நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம். அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா? அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது? ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே. நமக்கும் நலம் கிட்டியது, நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே, அல்லது அதே நலம் நாமும் பெறுவோம் அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்?ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான். அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்? ஆகவே, முதலில் பொறாமையை வென்றுவிடு!
 -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...