நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில்
நீ சமர்ப்பித்தபின்னர், கவலை எதற்கு! எனது மகிமைகளைக் கண்டும் ஏன் இந்த ஏக்கம் உனக்கு.
உனது தந்தையும் நானே, தாயும் நானே, உன்னைப் படைத்ததும் நானே,
உன்னை சோதிப்பதும்
நானே. உனது சோதனைக்காலம் முடிந்தபின்னர்
நீ யார் என்பதை, நீ அறிந்து கொள்வதற்கு நான் தரும் சோதனைகள்தான் இப்போது நீ படும் வேதனைகள்.
நம்பிக்கையுடனும் ,பொறுமையுடனும் இரு. அதற்கான பலன்கள் விரைவில் உன்னை வந்தடையும்.
உனக்கான நல்ல நேரம் வரும் வரை என் மடியில் அமர்ந்து உன் கர்மாக்களை கழி. நீ தோள்
சாய உன் தந்தை நானிருக்க, ஏன் உனக்கு இந்த
ஆயாசம்.
வா மகளே! மகனே! வந்து சாய்ந்து கொள். மன சஞ்சலங்களை அகற்றி
அமைதி கொள். விரைவில் உன் பிரச்சனைகளை தீர்த்து உன்னை மகிழ்ச்சி வெள்ளத்தில்
மூழ்கடிக்கின்றேன். அது வரை எனது நாமத்தை ஜபித்து உன் கர்மாக்களை என் துணையோடு
கழி.
No comments:
Post a Comment