Tuesday, May 30, 2017

பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்


 
பம்பாயைச் சேர்ந்த ராம்லால் என்ற பஞ்சாபி பிராமணர் ஒரு கனவு கண்டார்.  அதில் பாபா தோன்றி ஷீர்டிக்கு வரும்படி கூறினார்.  காட்சியில் அவர் ஒரு மஹந்த் (மஹான்) ஆகத் தோன்றினார்.  ஆனால் அவர் எங்கிருப்பார் என ராம்லால் அறியார்.  பாபாவைச் சென்றுப் பார்க்க எண்ணினார்.  ஆனால் அவரது விலாசத்தை அறியார்.  என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை.  ஒரு பேட்டிக்காக ஒருவரை அழைப்பவன் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் அவனே செய்கிறான்.  இந்த விஷயத்தி்லும் அதுவே நடந்தது.

அதேநாள் மாலை, வீதிகளில் மெதுவாக நடந்துகொண்டிருக்குபோது பாபாவின் ஒரு படத்தை ஒரு கடையில் ராம்லால் கண்டார்.  அவர் கனவில் கண்ட மஹானின் உருவாம்சங்கள் இப்படத்துடன் மிகப்பொருத்தமாக ஒன்றின.  விசாரித்ததில் அவர் ஷீர்டியைச் சேர்ந்த சாயிபாபா எனத் தெரிந்துகொண்டார்.  ஷீர்டிக்கு உடனே சென்றார்.  தனது இறுதிக்காலம்வரை அங்கேயே தங்கினார். 

தரிசனத்துக்காக இவ்விதமாக பாபா ஷீர்டிக்குத் தமது அடியவர்களைக் கொணர்ந்தார்.  அவர்களின் ஆத்மார்த்த, லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்தார்.

ஸ்ரீ சாயியைப் பணிக 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...