மனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே. மாயையின் விளையாட்டில் தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவுக்கும் தெரியும். எனவே பாபா எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறு செய்வதைத் தவிர்த்து தடுத்தாட் கொள்ளவே பார்ப்பார். பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால், பாபா நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றி விடுவார்.
" நீங்கள் எங்கேயிருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் நான் அதை முழுமையாக அறிவேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் " என்று பாபா கூறுவது வழக்கம். பாபா சகலமும் அறிந்தவராக இருந்தார் என்பதை ஸ்ரீ சாயி சத்சரித்திரம் காட்டுகிறது.
நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகளுக்கு கண்டிப்பாகக் பாபாவிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும். சில சமயம் நாம் பாபா காட்டிய வழியைப் பின்பற்ற முடியாமல் போகலாம். அதற்காக பாபா வருத்தப்படுவதில்லை. அவர் வெறுப்பு மற்றும் சினம் ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் கருணையே உருவானவர். குருபாதையில் முன்னேற பக்தனுக்கு உள்ள உண்மையான நோக்கத்தை அவர் கண்காணிக்கிறார். மன உறுதியுடன் திடமாக இருந்து பாபாவிடம் முழுமையாக சரணாகதியடைந்தால், அவனுடைய தவறுகளையும் பொருட்படுத்தாது பாபா தன் பக்தனை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார்.
No comments:
Post a Comment