Wednesday, May 31, 2017

ரஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்



அதிகாலை நேரங்களில் நாம் காணும் கனவானது, விழித்திருக்கும்போது நனவாகிறது என்று சொல்லப்படுகிறது.  அம்மாதிரி இருக்கலாம்.  ஆனால் பாபாவின் கனவுகட்குக் காலநியதியில்லை.  நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்குங்கால்:
ஒருநாள் மாலை பாபா, காகா சாஹேப் தீஷித்தை அழைத்து, ராஹாதாவிற்குச் சென்று, தாம் நெடுநாள் குஷால்சந்தை பார்க்காத காரணத்தால் அவரை ஷீர்டிக்கு அழைத்து வருமாறு கூறினார்.  அங்ஙனமே காகா சாஹேப் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ராஹாதா சென்று பாபாவின் செய்தியைத் தெரிவித்தார்.  அதைக்கேட்டு குஷால்சந்த் ஆச்சரியமடைந்தார். 

அன்று மதியம் உண்டபின் சிறுதுயில் கொண்டிருந்தபோது, பாபா அவர் கனவில் தோன்றி உடனே ஷீர்டிக்கு வரும்படி கூறினார்.  பக்கத்தில் தமது குதிரை இல்லாததால், தமது மகனை பாபாவுக்கு அறிவிக்கும்படியாக அனுப்பியிருந்தார்.  அவருடைய மகன் கிராம எல்லைக்குப் போய்க்கொண்டிருந்தபோது தீஷித்தின் வண்டி எதிரே வந்தது.  தீஷித் குஷால்சந்தை அழைத்துவரவே தாம் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்தார்.  பின் இருவரும் ஷீர்டி திரும்பினர்.  குஷால்சந்த் பாபாவைக் கண்டார்.  அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.  பாபாவின் இந்த லீலையைக் கண்டு குஷால்சந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...