1914ல் மூர்தாவிலிருந்து காச நோயால் அவதிப்பட்ட ஒரு பணக்கார முதியவர் சீரடி வந்தார். சீரடியில் தங்கியிருந்த ஒரு மாதத்தில் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம். ஆகவே, சீரடியிலேயே தங்கிவிட முடிவு செய்தார். இரண்டாம் மாதம் முடிவில் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.
இதைக் கண்ட அவர் வீட்டார், என்னிடம் பாபாவிடம் சென்று உதி வாங்கி வரச் சொன்னார்கள். நானும் பாபாவிடம் கேட்டேன். “உதி என்ன செய்யும்? அவன் இந்த உலகை விட்டு செல்வதே நல்லது. சரி, உதி எடுத்துச் செல்!” என்றார் பாபா. நானும் அவ்வீட்டில் உதியைக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால், பாபா சொன்னதைச் சொல்லவில்லை.
ஷாமா பாபாவிடம் வந்து, முதியவர் இறந்து விட்டதைக் கூறினார். உடனே பாபா, அவன் எப்படி இறக்க முடியும்? காலையில் உயிர் பிழைப்பான் என்றார். இதைக் கேட்ட உறவினர்கள் - முதியவரின் உடலைச்சுற்றி விளக்கேற்றி வைத்தனர். மதியம் வரை பிழைக்கவில்லை. பின் அடக்கம் செய்தனர்.
பாபா பொய் கூறிவிட்டதாக கோபம் கொண்டு உறவினர்கள் குடும்பத்தோடு மூர்தா சென்று விட்டார்கள். மூன்று ஆண்டுகள் சீரடிக்கு வரவேயில்லை.
ஒருநாள் இரவு முதியவரின் உறவினர் கனவு கண்டார். இறந்த முதியவரின் தலையோடு பாபா தோன்றினார். நுரையீரலைத் திறந்து காட்டினார். அழுகியிருந்தது.
”இந்த கொடுமையிலிருந்து நான் அவனை காப்பாற்றினேன்” என்றார் பாபா. பின் அவர்கள் சீரடிக்கு வரஆரம்பித்தனர்.
அவன் எப்படி இறப்பான்? காலையில் பிழைத்துக்கொள்வான் என்பதை தவறாகப் புரிந்துகொண்டனர். அந்த முதியவர் காலையில் மறுபிறவி எடுத்துவிடுவார் என்பதைத்தான் பாபா இப்படி கூறினார். ஆகவே, பாபாவின் எந்த வார்த்தையையும் சரியாக உள்வாங்கி அர்த்தம் காண வேண்டும்.
கு.இராமச்சந்திரன்
No comments:
Post a Comment