அது 1914 ம் ஆண்டு. பாபா என்னிடம் பலமுறை பதினைந்து ரூபாய் தட்சணை கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். இதை அவரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர், ”உன்னிடம் பணம் இல்லை என்பது தெரியும். ஆனால், நீ யோக வசிஷ்டம் படிக்கிறாய் அல்லவா? அதிலிருந்து கொடு” என்றார்.
அதாவது நான் யோக வசிஷ்டத்தில் உள்ள நல்ல போதனைகளை படித்து அதை நெஞ்சில் நிறுத்திக்கொள்வதே நான் அவருக்குக் கொடுக்கும் தட்சணை.
அவர் என் இதயத்திலேயே நீங்கா இடம் பெற்றுள்ளார் அல்லவா?
இராமனையும், கிருஷ்ணரையும் புனிதர்களாகக்கருதினார். ஞானேஸ்வர், துகாராம் போன்ற ஞானிகளையும் வெகுவாக மதித்தார். கடவுளை அடைய நான்குவித மார்க்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.
தியானம், கர்மம், ஞானம், பக்தி.
தியானத்தில் ஆசனம், பிராணாயாமம், ஒருமுனைப்படுத்தல், குண்டலினி - பின் இதன் மூலம் சக்தி பெறுதல். ஆனால் பாபா இதைப் பற்றியெல்லாம் அக்கறை காட்டியதுமில்லை, பிறரைச் செய்யச்சொன்னதும் இல்லை. ஆனால் என்னிடம் ஒருமுறை பிராணாயாமம் செய்கிறவர்கள் எல்லாம் மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடைய என்னிடம் வருவார்கள் என்றார்.
கு.இராமச்சந்திரன்
No comments:
Post a Comment