Wednesday, May 28, 2014

தோல்வியை வெற்றியாக்கிய பாபா!

sai-guide-us



என் பெயர் சண்முகம். ஆசிரியராகப் பணிபுரிகிறேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் வெங்கடேசன் பாபா படம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.



அப்போது மெடிக்கல் வைத்திருந்தேன். அதில் பாபாவை அமர்த்தி வழிபாடு செய்துவந்தேன். டிஆர்பி என்ற தேர்வுக்கு தயாராகி நான்கைந்து முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற இயலவில்லை.



ஐந்தாவது முறை தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்து வருகிற அரசாங்கம் டிஆர்பி தேர்வு முறையை ரத்து செய்துவிடும். ஏற்கனவே உள்ள தொழிலிலும் வருமானம் இல்லை. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.



இச்சூழலில் தேர்வு ஆகாவிட்டால் எதிர்காலம் கஷ்டத் துடன் தொடரும். எனது கஷ்டங்கள் நிவர்த்தியாக வேண்டும் என சாயி பாபாவிடம் வேண்டுதல் வைத்தேன்.



ஒருநாள் இரவு பாபா படத்தைப்பார்த்து எப்படியாவது இம்முறை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என பிரார்த்தித்து மனம் விட்டு அழுதேன். தேர்வு முடிவு வந்தது. எனக்கு அதிர்ச்சி. நான் தேர்வாகவில்லை.



பாபா எனது பிரார்த்தனையை கேட்கவில்லை எனத் தளர்ந்து விரக்தியடைந்து போனேன். ஒரு மாதம் கழித்து இன்னும் கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவதால், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.



இதில் எனக்கு பாபாவின் அருளால் பணி கிடைத்தது. தோல்வியை வெற்றியாக மாற்றிய பாபா மீது அதிலிருந்து இன்னும் அதிகமான பக்தி ஏற்பட்டது.



எத்தனையோ நிகழ்வுகள் பாபா என்னுடன் இருக்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக அறிந்திருக்கிறேன். அவற்றை அனுபவத்தில் மட்டுமே உணரமுடியும். வார்த்தைகளில் எழுத முடியாது.



எப்போதும் பாபா என்னுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு தீவிரமாக இருக்கிறது. தோல்விகளையும் வெற்றிகளாக மாற்றுகிறவர் பாபா.



 சண்முகம் ஆசிரியர்



சின்ன சேலம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...