Tuesday, April 30, 2013

ஸ்ரீ சாயி


குரு நல்லவரா கெட்டவரா
 என்று ஆராய்ச்சி செய்து 
கொண்டிராமல் குரு 
அளிக்கும் விஷயம் நல்லதா
கெட்டதா என ஆராயவேண்டும். 
அப்படித்தான் சத்சரித்திரம் கூறும்
 அனைத்துத் தகவல்களும்

Monday, April 29, 2013

ஸ்ரீ சாயி

சாயியை நம்புகிறவன், 
சத்சரித்திரத்தில் கூறியுள்ள
 தகவல்கள் உண்மையா
 பொய்யா என்று ஆராய்ச்சி 
செய்துகொண்டிராமல் 
அவரது உதியின் மீது 
நம்பிக்கை வைக்கவேண்டும்.

Sunday, April 28, 2013

ஸ்ரீ சாயி

பிரார்த்தனை என்பது மவுனமாகவும் இருக்கலாம், 
வாய்விட்டும் கேட்கலாம். 
பிரார்த்தனையினை எப்படி செய்யலாம்?
மவுனமாக செய்யவேண்டுமா?
இதற்க்கு ராமகிருஷ்ணர் சொல்லுவது என்ன தெரியுமா?
எப்படி வேண்டுமானாலும் செய்துகொள், 
அது உன் இஷ்டம்.
மெல்ல அழுதாலும் ஆண்டவனுக்கு கேட்கும்.
எறும்பின் காலடிச்சத்தம் கூட அவன் காதுக்கு எட்டும்

Saturday, April 27, 2013

ஸ்ரீ சாயி


பாபாவின் அருள் பக்தர்களின்
 நியாயமான கோரிக்கையினை
 நிச்சயம் பூர்த்தி செய்யும். 
அதற்கு பாபாவிடம் 
பிரார்த்திக்கொண்டே 
இருக்க வேண்டும், 
அதுமட்டுமல்லாது 
அந்தப் பிரார்த்தனையினை
 பாபா நிச்சயம் நிறைவேற்றுவார்
 என்ற நம்பிக்கையும் வேண்டும். 
நம்பிக்கையோடு பொறுமையும் 
சேர்ந்தால் எல்லாம் 
நல்ல விதமாகவே நடக்கும்.

Friday, April 26, 2013

ஸ்ரீ சாயி


சத்சரித்திரத்தில் கூறியதுபோல் 
அன்போடு, மனம் உருகி,  கண்ணீர் மல்கி 
பிரார்த்தனை செய்யுங்கள். 
அவர் காட்டும் வழி, 
அவரின் தீர்வு
நீங்கள் நினைப்பதை விட
 அற்புதமாக இருக்கும். 
பின்னாளில் அந்த தீர்வை நினைத்து
 வருத்தப்படும் நிலைமை ஏற்படாது. 
மகிழ்ச்சி மட்டுமே ஏற்படும்.

Thursday, April 25, 2013

ஸ்ரீ சாயி

கஷ்டம் வரும்போது மனம் பதைபதைக்கும். 
சரியாக சிந்திக்காது. ஆகவே, சரியான தீர்வும் கிடைக்காது. 
கஷ்டம் வரும்போது அதை கவனிக்க வேண்டும், 
எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஆத்திரப்படவோ அவசரப்படவோ கூடாது. அதை அமைதியாக கவனிக்கும்போது 
பாபா அதற்குரிய  தீர்வினை நிச்சயம் அளிப்பார். 
இந்த உலகத்தில் பாபாவை விட 
தனது பக்தர்களைக் காக்கும் திறன் படைத்தவர்
 எவரேனும் உண்டோ?

நமக்கு தேவை     நம்பிக்கை    பொறுமை 

Wednesday, April 24, 2013

ஸ்ரீ சாயி






எனது பக்தர்களையும், குழந்தைகளையும் எப்படியாவது காட்டுவது என் கடமை என்கிறார் பாபா. இதை விட சிறந்த உறுதிமொழியினை வேறு எவராவது தர முடியுமா? கஷ்டம் என்று வந்துவிட்டால் மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளவேண்டாம். பாபாவிடம் உண்மையாக பிரார்த்தியுங்கள்

Tuesday, April 23, 2013

ஸ்ரீ சாயி




சத்சரித்திரத்தில் கூறியதுபோல் அன்போடு, மனம் உருகி கண்ணீர் மல்கி பிரார்த்தனை செய்யுங்கள்.  பாபா நிச்சயம் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையோடு பிரார்த்தியுங்கள்.  நீங்கள் வாய் விட்டு அவரிடம் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் மனதில் என்ன உள்ளது என்று அவர் அறிவார்.

Monday, April 22, 2013

ஸ்ரீ சாயி







எவன் ஒருவன் பாபாவை நினைக்க ஆரம்பித்துவிட்டானோ,  அப்போதே அவன் பாபாவின் பக்தனாகிவிடுகிறான்.

Sunday, April 21, 2013

ஸ்ரீ சாயி


என் பக்தனை யார் கை விட்ட போதும் நான் கைவிடமாட்டேன் என பாபா உறுதி தருகிறார்.  பாபாவின் திருவடியை தியானம் செய்து எல்லா நலமும் பெற்று பாபாவிற்க்கு நமது நன்றியினை செலுத்துவோம்.

Saturday, April 20, 2013

ஸ்ரீ சாயி

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். எனக்கு வண்டியோ, குதிரை, ஆகாய விமானமோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறார்களோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுவேன்.

Friday, April 19, 2013

ஸ்ரீ சாயி

இறைவா!
     குருராயரே!
            எங்களை உருவாக்கிப் படைத்து வழி நடத்தி வருகிறவரே!

                                      உம்மை நமஸ்கரிக்கின்றோம்.

சாயி மார்க்கம்

சாய் மார்க்கத்தில் செல்வதற்கு மூன்று சிறந்த வழிகள் உண்டு. அதில் முதலாவது,
 
1. சீரடிக்கு செல்வது
2. சாயி சத்சரித்திரம் பாராயணம் செய்வது.
3. நான்கு வேளைகளும் ஆரத்தி பாடுவது.
 
இதில் மூன்றாவது வேலையை  முதலில் செய்து விட்டால் முதல் இரண்டு வேலைகளும், எந்த தடையுமின்றி நடக்கும். ஆகையால் ஆரத்தி செய்வதால் நல்ல பலன்களே கிடைக்கும். குடும்பத்தினர், பந்துக்கள் ஓர் இடத்தில் சேர்ந்து ஒழுங்கு தவறாமல் சாய் ஆரத்திகளை பாடுவதினால் மனம் நிம்மதியடைந்து  நல்ல  சூழ்நிலை குடும்பத்தில் உண்டாகும்.
 
ஆரத்தி நடக்கும் இடம்  புனிதமடைந்து சாந்தி நிலையமாக மாறும். சீரடி சாய் மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது. காலை 4.30 காகட ஆரத்தி மதிய வேளையில் 12 மணிக்கு மதிய ஆரத்தி நடக்கும். மாலையில் சூரியன் மறையும் கோதூளி வேளையில் தூப ஆரத்தியும், இரவு 10.30 மணிக்கு  சேஜ் ஆரத்தியும் நடைபெறுகின்றன.
 
சமாதி மந்திரியில் ஆரத்தி நடை பெற்றுக் கொண்டிருந்தாலும், துவாரக மயீ, சாவடி, குருஸ்தான், க்யூ காம்ப்ளக்சில் டி.வி.யில் பார்த்துக் கொண்டு நாம் ஆரத்தி நடத்திக் கொள்ளலாம். இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன. 
 
ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறுசுறுப்படையலாம். இந்த ஆரத்தியால் பல அற்புதங்கள்  நிறைந்துள்ளன. நாம் காலையில் எழுந்து சத்குருவை நினைத்து உலகமும் நாமும் நலமாக இருப்பதற்கு காகட ஆரத்தி உதவி செய்கிறது. அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு துன்பங்கள் வராமல் இருப்பதற்கு மத்திய வேளை ஆரத்தி உதவி செய்கிறது.
 
மனம் போன போக்கில் போகாமல் சாய் சரணம் அடைவதற்கு தூப ஆரத்தி உதவி செய்கிறது. இன்று நடந்த நல்ல காரியங்களுக்காக நன்றி தெரிவிக்க சேஜ் ஆரத்தி செய்கிறோம். இந்த நான்கு  ஆரத்திகளை தினம் தினம் செய்வதினால் மனமும் உடலும் நல்வழி செல்லும்,. அதுவே பாபாவின் வழி. எங்கெல்லாம் சாய் ஆரத்தி நடக்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சாய் உறுதி மொழி கூறுகிறார்.
 
சீரடி சாய் பாபாவுக்கு முதன் முதல் எழுதப்பட்ட ஆரத்திப் பாடல் "ஆரத்தி சாய் பாபா''. இந்த பாடல் மத்திய வேளையில் தூப ஆரத்தியில் உள்ளது. இந்த பாடலுடன் தான் தூப ஆரத்தி ஆரம்பமாகும். இந்தப் பாடலை எழுதியவர் மாதாவா அக்கர். காலம் செப்டம்பர் 1904 (இந்தப் பாடலை தாசகணுவிற்கு காட்டினார்.
 
அவர் "இந்த பாடலை நம் பாபா பார்த்தால் நன்றாக  இருக்கும்'' என்று சொன்னார். மாதவா அக்கர் பாபாவிடம் இந்தப் பாடலை காட்டியவுடன் ''இந்த பாடலை ஆரத்தியில் பாடுங்கள்.  (இந்த பாடல் நன்றாக இருக்கிறது. இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று ஆசீர்வதித்தார்.
 
பாபாவின் அவதாரம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அவர் மற்றுமொரு ஜென்மம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத் தான் நான்கு வேளைகளிலும் சமாதி மந்திரியில் ஆரத்தி நடந்து கொண்டிருக்கிறது.
 
சமாதியில் இருந்து கொண்டே நான் எல்லா காரியங் களையும் செய்து கொண்டிருப்பேன் என்று பாபாவே 11 கட்டளைகளில் கூறியதை நாம் நினைவு கொள்ள வேண்டும். சீரடியில் பாபா உடலுடன் இருந்த பொழுது துவாரகா மாயயில் மத்திய ஆரத்தி மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா சாவடியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சேஜ் ஆரத்தி,  அடுத்த மறு நாள் காலையில் காகட ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. 
 
 
மேலும் தொடர இங்கு செல்லவும்

பாபா பேசினார்




                     ந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் வியப்பு மேலிடு கிறது; மெய்சிலிர்க்கிறது;

அதைப் பற்றி பேசும்போது நா தழுதழுக்கிறது; கண்களில் மெல்ல நீர் கசிகிறது; அப்படி என்னதான் நடந்துவிட்டது? இது சாத்தியமா? சாத்தியமாகி விட்டதே! அதுதான் சத்தியம்- நிஜம்!

அதைச் சொல்வதற்கு முன்னால், இதற்குள் என் மனம் எப்படி புகுந்தது என்பதையும் சொல்ல வேண்டு மல்லவா?

ஒருநாள் காலை நேரம்; நான் பூஜை புனஸ் காரங்களை முடித்துக்கொண்டு அன்றைய நாளிதழைப் படித்து முடித்தபோது நேரம் ஒன்பது மணி.

வீட்டு வாயிலில் யாரோ வந்திருப்பதாக என் மனைவி தெரிவித்தாள். போய் பார்த்தேன். மூன்று பழுத்த பக்தகோடிகள் நெற்றி நிறைய திருநீறும் குங்குமமுமாகக் காட்சியளித்தனர். அதில் ஒருவர் காவி உடையில் இருந்தார்.

மூவரும் என்னைப் பார்த்ததும், "ஜெய் சாய்ராம்' என்று ஒரே குரலில் உச்சரித்தார்கள். எனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் கைகூப்பி அவர்களை யாரென்று விசாரித்தேன்.

""நாங்கள் ஷீரடி பாபாவின் பக்தர்கள். உங்களைப் பற்றி கேள்விப்பட்டோம். அதுதான் பேச வந்திருக் கிறோம்'' என்றார்கள். "நான் சாய்பாபா பக்தன் இல்லையே- இவர்கள் ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்?' என்று மனதிற்குள் நினைத்தேன். ஆனால் மூன்று பேரையும் உள்ளே அழைத்து அமர வைத்தேன். பின்பு அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

""சாய் ராம்... இவர் பேரு ராமமூர்த்தி... இவர் திருவொற்றியூர் வடுகர் பாளையத்திலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலின் நிறுவனர். இவர் சுதர்ஸனம். கோவில் வேலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். என் பெயர் ஆஞ்சனேய சுவாமி. எனக்கு எல்லாமே பாபாதான்.''

""மிகவும் சந்தோஷம். எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?'' என நான் கேட்டேன்.

""சாய்ராம்... எங்கள் சாய்பாபா கோவிலில் ஒவ்வொரு குருவாரமும் (வியாழக்கிழமை) மிகப்பெரிய அளவில் பாபாவுக்கு பூஜை நடைபெறும். அதற்குப் பிறகு குறைந் தது ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்கிறோம். பூஜை காலை பத்து மணிக்குள் முடிந்துவிடும். அன்னதானம் பன்னிரண்டரை மணிக்கு ஆரம்பமாகும். 

அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும். பலர் வந்து உரையாற்றி இருக்கிறார்கள். வரும் வியாழக்கிழமை நீங்கள் பேச வேண்டும்'' என்றார் ஆஞ்சனேய சுவாமி.

""நானா? மன்னிக்கவும். ஷீரடி சாய்பாபாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அவர் வரலாறே எனக் குத் தெரியாது! நான் எப்படி பேசுவது?'' என்றேன்.

""அப்படி சொல்லக்கூடாது. அவசியம் நீங்கள் பேசியே ஆகவேண்டும்'' என்று மூவரும் வற்புறுத்திச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

""ராமாயணம், மகாபாரதம், அடியார்களின் வரலாறு என்றால் பேசுகிறேன். ஆனால் சாய்பாபாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே...'' என்று உண்மையைச் சொன்னாலும், ""நீங்கள் பேசப் போகிறீர்கள். பேசியே ஆகவேண்டும். இது பாபாவின் கட்டளை. நோட்டீஸில் உங்கள் பெயரைப் போட்டு விடுகிறோம்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். நான் பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தேன்.

மேலும் தொடர இங்கு செல்லவும்

Thursday, April 18, 2013

ஸ்ரீ சாயி


மகிழ்ச்சியாக இருக்கும்போதும் உம்மை மறந்தறியோம்.
துன்பக்காலத்திலும் உம்மை துதிப்பதைத் தவிர்த்து வேறொன்றறியோம்
உமது விருப்பம் போல, உமக்கு விருப்பமான வழியில் நடக்க
நாங்கள் பரிபூரண சித்தத்தோடு காத்திருக்கிறோம்.

Wednesday, April 17, 2013

ஸ்ரீ சாயி


எங்களை நாங்கள் புரிந்துக்கொள்வதற்காகவே
இப்படி சோதனை செய்கிறீர்கள் என்பதை 
உணர்ந்து கொண்டோம். இப்போது எங்கள்
சுமைகளையெல்லாம் உம்மீது சுமத்திவிட்டு
காத்துக்கொண்டிருக்கிறோம்.
குருதேவரே!  எங்களை கைவிட்டு விடாதேயும்.

Tuesday, April 16, 2013

ஸ்ரீ சாயி

குரு தேவரே!

எங்களை கைவிட்டு விடாதேயும்.
நாங்கள் மனிதரை நம்பி மோசம் போன
காயங்கள் போதும்.
நீங்கள் எங்களை தூக்கி எடுத்து தேற்றி
ஆறுதல் படுத்துங்கள்.
உமது கருணையால் எங்களை
தலை நிமிரச்செய்யுங்கள்.

Monday, April 15, 2013

ஸ்ரீ சாயி

பல விசயங்களில் பாபா அற்புதம் செய்தார், அவர் செய்த அற்புதங்களையும் அவரது லீலைகளையும் என்னால் விவரிக்க முடியவில்லை.  மனதளவில் உணர முடிகிறது.                                  - ஒரு சாயி பக்தையின் அனுபவம்

Sunday, April 14, 2013

ஸ்ரீ சாயி

சாயியின் அற்புதங்களை மனதளவில்தான் உணர முடிகிறது.
வாயால் சொல்லமுடியவில்லை
ஒவ்வொரு செயலிலும் பாபாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அவரின்றி எனக்கு ஏதுமில்லை
                                                                          -------           ஒரு அன்பரின் அனுபவம்

ஸ்ரீ சாயி

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Thursday, April 4, 2013

ஸ்ரீ சாயி

நீ அனுபவிக்க வேண்டியது இருந்தால்
 அதனை நீ பொறுமையாக அனுபவி.
பதற்றப்படாதே,
பயப்படாதே,
புலம்பாதே!
அனைத்தையும் பகவான் தீர்க்கமாக
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இது விரைவில் மாறும்
நீ வாழ்க்கையின் உச்சத்தை
தொட்டபின்தான் கண் மூடுவாய்.
அவரது புனிதமான பாதங்களின் மீது
பாரத்தைப் போட்டு நம்பிக்கையோடு
அந்த நல்ல நாளுக்காகக் காத்திரு.
அது விரைவில் மிகப்பெரிய
ஆசிர்வாதத்துடன் உன்னிடம் வரும்.
ஜெய் சாய் ராம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...