Friday, April 19, 2013

பாபா பேசினார்




                     ந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் வியப்பு மேலிடு கிறது; மெய்சிலிர்க்கிறது;

அதைப் பற்றி பேசும்போது நா தழுதழுக்கிறது; கண்களில் மெல்ல நீர் கசிகிறது; அப்படி என்னதான் நடந்துவிட்டது? இது சாத்தியமா? சாத்தியமாகி விட்டதே! அதுதான் சத்தியம்- நிஜம்!

அதைச் சொல்வதற்கு முன்னால், இதற்குள் என் மனம் எப்படி புகுந்தது என்பதையும் சொல்ல வேண்டு மல்லவா?

ஒருநாள் காலை நேரம்; நான் பூஜை புனஸ் காரங்களை முடித்துக்கொண்டு அன்றைய நாளிதழைப் படித்து முடித்தபோது நேரம் ஒன்பது மணி.

வீட்டு வாயிலில் யாரோ வந்திருப்பதாக என் மனைவி தெரிவித்தாள். போய் பார்த்தேன். மூன்று பழுத்த பக்தகோடிகள் நெற்றி நிறைய திருநீறும் குங்குமமுமாகக் காட்சியளித்தனர். அதில் ஒருவர் காவி உடையில் இருந்தார்.

மூவரும் என்னைப் பார்த்ததும், "ஜெய் சாய்ராம்' என்று ஒரே குரலில் உச்சரித்தார்கள். எனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் கைகூப்பி அவர்களை யாரென்று விசாரித்தேன்.

""நாங்கள் ஷீரடி பாபாவின் பக்தர்கள். உங்களைப் பற்றி கேள்விப்பட்டோம். அதுதான் பேச வந்திருக் கிறோம்'' என்றார்கள். "நான் சாய்பாபா பக்தன் இல்லையே- இவர்கள் ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்?' என்று மனதிற்குள் நினைத்தேன். ஆனால் மூன்று பேரையும் உள்ளே அழைத்து அமர வைத்தேன். பின்பு அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

""சாய் ராம்... இவர் பேரு ராமமூர்த்தி... இவர் திருவொற்றியூர் வடுகர் பாளையத்திலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலின் நிறுவனர். இவர் சுதர்ஸனம். கோவில் வேலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். என் பெயர் ஆஞ்சனேய சுவாமி. எனக்கு எல்லாமே பாபாதான்.''

""மிகவும் சந்தோஷம். எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?'' என நான் கேட்டேன்.

""சாய்ராம்... எங்கள் சாய்பாபா கோவிலில் ஒவ்வொரு குருவாரமும் (வியாழக்கிழமை) மிகப்பெரிய அளவில் பாபாவுக்கு பூஜை நடைபெறும். அதற்குப் பிறகு குறைந் தது ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்கிறோம். பூஜை காலை பத்து மணிக்குள் முடிந்துவிடும். அன்னதானம் பன்னிரண்டரை மணிக்கு ஆரம்பமாகும். 

அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும். பலர் வந்து உரையாற்றி இருக்கிறார்கள். வரும் வியாழக்கிழமை நீங்கள் பேச வேண்டும்'' என்றார் ஆஞ்சனேய சுவாமி.

""நானா? மன்னிக்கவும். ஷீரடி சாய்பாபாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அவர் வரலாறே எனக் குத் தெரியாது! நான் எப்படி பேசுவது?'' என்றேன்.

""அப்படி சொல்லக்கூடாது. அவசியம் நீங்கள் பேசியே ஆகவேண்டும்'' என்று மூவரும் வற்புறுத்திச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

""ராமாயணம், மகாபாரதம், அடியார்களின் வரலாறு என்றால் பேசுகிறேன். ஆனால் சாய்பாபாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே...'' என்று உண்மையைச் சொன்னாலும், ""நீங்கள் பேசப் போகிறீர்கள். பேசியே ஆகவேண்டும். இது பாபாவின் கட்டளை. நோட்டீஸில் உங்கள் பெயரைப் போட்டு விடுகிறோம்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். நான் பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தேன்.

மேலும் தொடர இங்கு செல்லவும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...