Friday, April 19, 2013

சாயி மார்க்கம்

சாய் மார்க்கத்தில் செல்வதற்கு மூன்று சிறந்த வழிகள் உண்டு. அதில் முதலாவது,
 
1. சீரடிக்கு செல்வது
2. சாயி சத்சரித்திரம் பாராயணம் செய்வது.
3. நான்கு வேளைகளும் ஆரத்தி பாடுவது.
 
இதில் மூன்றாவது வேலையை  முதலில் செய்து விட்டால் முதல் இரண்டு வேலைகளும், எந்த தடையுமின்றி நடக்கும். ஆகையால் ஆரத்தி செய்வதால் நல்ல பலன்களே கிடைக்கும். குடும்பத்தினர், பந்துக்கள் ஓர் இடத்தில் சேர்ந்து ஒழுங்கு தவறாமல் சாய் ஆரத்திகளை பாடுவதினால் மனம் நிம்மதியடைந்து  நல்ல  சூழ்நிலை குடும்பத்தில் உண்டாகும்.
 
ஆரத்தி நடக்கும் இடம்  புனிதமடைந்து சாந்தி நிலையமாக மாறும். சீரடி சாய் மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது. காலை 4.30 காகட ஆரத்தி மதிய வேளையில் 12 மணிக்கு மதிய ஆரத்தி நடக்கும். மாலையில் சூரியன் மறையும் கோதூளி வேளையில் தூப ஆரத்தியும், இரவு 10.30 மணிக்கு  சேஜ் ஆரத்தியும் நடைபெறுகின்றன.
 
சமாதி மந்திரியில் ஆரத்தி நடை பெற்றுக் கொண்டிருந்தாலும், துவாரக மயீ, சாவடி, குருஸ்தான், க்யூ காம்ப்ளக்சில் டி.வி.யில் பார்த்துக் கொண்டு நாம் ஆரத்தி நடத்திக் கொள்ளலாம். இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன. 
 
ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறுசுறுப்படையலாம். இந்த ஆரத்தியால் பல அற்புதங்கள்  நிறைந்துள்ளன. நாம் காலையில் எழுந்து சத்குருவை நினைத்து உலகமும் நாமும் நலமாக இருப்பதற்கு காகட ஆரத்தி உதவி செய்கிறது. அன்றாட வாழ்க்கையில் சிறுசிறு துன்பங்கள் வராமல் இருப்பதற்கு மத்திய வேளை ஆரத்தி உதவி செய்கிறது.
 
மனம் போன போக்கில் போகாமல் சாய் சரணம் அடைவதற்கு தூப ஆரத்தி உதவி செய்கிறது. இன்று நடந்த நல்ல காரியங்களுக்காக நன்றி தெரிவிக்க சேஜ் ஆரத்தி செய்கிறோம். இந்த நான்கு  ஆரத்திகளை தினம் தினம் செய்வதினால் மனமும் உடலும் நல்வழி செல்லும்,. அதுவே பாபாவின் வழி. எங்கெல்லாம் சாய் ஆரத்தி நடக்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன் என்று சாய் உறுதி மொழி கூறுகிறார்.
 
சீரடி சாய் பாபாவுக்கு முதன் முதல் எழுதப்பட்ட ஆரத்திப் பாடல் "ஆரத்தி சாய் பாபா''. இந்த பாடல் மத்திய வேளையில் தூப ஆரத்தியில் உள்ளது. இந்த பாடலுடன் தான் தூப ஆரத்தி ஆரம்பமாகும். இந்தப் பாடலை எழுதியவர் மாதாவா அக்கர். காலம் செப்டம்பர் 1904 (இந்தப் பாடலை தாசகணுவிற்கு காட்டினார்.
 
அவர் "இந்த பாடலை நம் பாபா பார்த்தால் நன்றாக  இருக்கும்'' என்று சொன்னார். மாதவா அக்கர் பாபாவிடம் இந்தப் பாடலை காட்டியவுடன் ''இந்த பாடலை ஆரத்தியில் பாடுங்கள்.  (இந்த பாடல் நன்றாக இருக்கிறது. இதை யார் பாடினாலும் அவர்கள் என்னை அடைவார்கள் என்று ஆசீர்வதித்தார்.
 
பாபாவின் அவதாரம் இன்னும் நடந்து கொண்டேயிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அவர் மற்றுமொரு ஜென்மம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத் தான் நான்கு வேளைகளிலும் சமாதி மந்திரியில் ஆரத்தி நடந்து கொண்டிருக்கிறது.
 
சமாதியில் இருந்து கொண்டே நான் எல்லா காரியங் களையும் செய்து கொண்டிருப்பேன் என்று பாபாவே 11 கட்டளைகளில் கூறியதை நாம் நினைவு கொள்ள வேண்டும். சீரடியில் பாபா உடலுடன் இருந்த பொழுது துவாரகா மாயயில் மத்திய ஆரத்தி மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா சாவடியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சேஜ் ஆரத்தி,  அடுத்த மறு நாள் காலையில் காகட ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. 
 
 
மேலும் தொடர இங்கு செல்லவும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...