தினத்தியானம்
4
”
இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்க்கதி என்கிற கெடுநிலையை
யுகம் முடியும்வரை அடைய மாட்டார்! இப்பொழுது
நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துச் சென்று
காயத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும்.
இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.
இது
சாதாரண மசூதி அன்று. ஸ்ரீ கிருஷ்ணனின் துவாரகை.
இந்த மசூதியில் கால் எடுத்து வைத்தவர் உடனே
சேமத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப்பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்.
சாயி
சத்சரித்திரத்திலிருந்து
இப்பொழுது
நீங்கள் கவலையை விடுங்கள்!
நாசிக்
மாவட்டத்தைச் சேர்ந்த மாலே காங்வ் ஊரைச்சேர்ந்த
டாக்டர் முல்கி என்பவரின் அண்ணன் மகன்,
விலா எலும்பில் புரையோடிய ரணம் இருந்தது. முல்கி
மிகப் பெரிய அறுவை சிகிச்சை மருத்துவராக
இருந்தும், அவனை காப்பாற்ற இயலாத
நிலையில் இருந்தார்.
சிகிச்சைகளும்,
வழிபாடுகளும் பலன் தராத நிலையில் செய்வது
அறியாமல் திகைத்தார்கள்.
அந்த நேரத்தில் ”சீரடியில் ஒரு முஸ்லிம் மகான் இருக்கிறார்.
அவருடைய தரிசனம் ஒன்றே வியாதிகளை நிவர்த்தியாக்குகிறது. அவரது கையால் உதீ தடவினால், தீராத
கொடிய வியாதிகளும் குணம் அடைகின்றன” என்று டாக்டர் கேள்விப்பட்டார்.
இதை
தன் அண்ணனிடம் சொன்ன போது, “பாபாவின் பாதங்களை
வணங்குவதற்காகப்போவோம். கடைசி முயற்சியையும் செய்து
பார்த்துவிடுவோம். இந்த வழியிலாவது அபாயம்
விலகட்டும்” என முடிவெடுத்து, சீரடிக்கு
வந்தார்கள். பிள்ளையைப் பெற்றவர்கள் பாபாவைப் பார்த்த மாத்திரத்தில் துக்கத்தால் மனம் உடைந்து
கதறினார்கள்.
”ஓ!
சமர்த்த
சாயி! மகன் படும் வேதனையையும், அனுபவிக்கிற துக்கத்தையும் பார்க்க சகிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை.
நாங்கள் இவனுக்கு சிகிச்சை செய்து களைத்து விட்டோம்.
உங்கள் மகிமையைக்கேள்விப்பட்டு இவ்வளவு தூரம் பயணம் செய்து
இங்கு வந்திருக்கிறோம். முழுமையாக உங்களை சரணடைகிறோம். உங்களுடைய அருட்கரத்தை இவன் தலைமேல்
வைத்து, இவனுடைய நோயைப்போக்குங்கள், இவனது உயிரை தானமாக எங்களுக்கு தருவீர்களாக” என்று வேண்டினார்கள்.
பக்தன்
அழுதால் தாங்காத கருணை உள்ளம் படைத்த வரான
சாயிநாதன், ஆறுதல் கூறினார்: ” இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்க்கதி என்கிற கெடுநிலையை
யுகம் முடியும்வரை அடைய மாட்டார்! இப்பொழுது
நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துச் சென்று
காயத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும்.
இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.
இது
சாதாரண மசூதி அன்று. ஸ்ரீ கிருஷ்ணனின் துவாரகை.
இந்த மசூதியில் கால் எடுத்து வைத்தவர் உடனே
சேமத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப்பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்.
இங்கு
வந்தவர் நிவாரணம் பெற வில்லை என்பது, சென்ற காலம்,
நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நடக்காத விக்ஷயம். உம் காரியம் கைகூடும்
என்பதை அறிவீர்களாக” என்று
வாக்குறுதி அளித்தார்.
பையனை
தன் எதிரில் உட்கார வைக்கச் சொன்னார்.
அவனது தலையை அன்போடு வருடிக்கொடுத்தார். கால்களை
தடவி விட்டார். அன்போடு பார்த்தார். சாயி
தரிசனம் உடலில் மாற்றத்தை உண்டாக்கியது. அவர் தந்த உதி எட்டு நாட்களில்
கொடிய காயத்தை ஆற்றியது.
அவர்கள்
நான்கு நாட்கள் சீரடியில் தங்கி பாபாவை
தரிசனம் செய்து வீடு திரும்பிச் சென்றார்கள். எப்படிப்பட்ட நோயையும் உதி குணமாக்கும் அற்புதம் பாபாவின் அருட்பார்வைக்கு உண்டு.
பிரார்த்தனை
சமர்த்த
சாயி நாத குருவே!
உங்கள்
குழந்தையான நாங்கள் படும் பாட்டை அறிந்து தயவு
கூர்ந்து விரைவாக எங்கள் நோயை போக்கியருள வேண்டும்
எனப்பிரார்த்தனை செய்கிறோம்.
உங்கள்
உதியால் எங்களுக்கு விரைந்து தீர்வு தருவீராக.
No comments:
Post a Comment