Monday, August 17, 2015

நீ வெற்றி பெறுவாய்!

தினத்தியானம் 7
நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது. பாபாவினை முழுமையாக நம்பு என்று சொல்லவும்                        சத்சரித்திரம் 29:11
நீ வெற்றி பெறுவாய்!
மும்பையின் புறநகர்ப் பகுதியான பாந்த்ரா என்ற நகரத்தில் ரகுநாத் ராவ் தெண்டுல்கர் என்ற சாயி பக்தரும், அவரது மனைவி சாவித்ரி, மகன்கள் அனைவரும் சாயி பக்தர்கள்.
மூத்த மகன் பாபு மருத்துவம் படித்துவந்தான். தேர்ச்சி பெறவேண்டும் என்பது அவனது லட்சியம். ஆனால் ஜோதிடரை அரூகி, தேர்ச்சி பெறுவேனா என்று கேட்டான்.
ஜோதிடர் பாபுவின் ராசி, நட்சத்திரம், கிரகங்கள் அமர்ந்திருந்த இடம் ஆகியவற்றைப் பார்த்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறுவாய், இந்த ஆண்டு கிரக நிலை சரியில்லை என்று கூறிவிட்டார். சிரமப்பட்டு படித்தது எல்லாம் பயனின்றிப் போய்விடப்போகிறது என்றால், பரீட்சைக்கு அமர்வதில் அர்த்தம் என்ன என்று பாபு மனம் உடைந்தான்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பாபுவின் தாயாரான சாவித்ரி, க்ஷPரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தபோது, பாபாவின் பாதங்களில் தலை வைத்து, ஜோதிடர் சொன்ன விக்ஷயங்களை சொன்னாள்.
இதைக் கேட்டு்  “நான் சொல்வதை மட்டுமே அவனை செய்யச் சொல்லுங்கள். ஜாதகத்தை சுருட்டி  மூலையில் வைத்துவிட்டு, அமைதியான மனத்துடன் பரீட்சை எழுதச் சொல்லுங்கள். வேறு யார் சொல்வதையும் கேட்க வேண்டாம். ஜாதகத்தை எவரிடமும் காட்ட வேண்டா என்று பையனிடம் சொல்லவும். பையனிடம் நீ வெற்றி பெறுவாய், சோர்வு வேண்டா, அமைதியாகவும் தெம்பாகவும் பரீட்சை எழுது, பாபாவை முழுமையாக நம்பு என்று சொல்லவும்”  எனக் கூறி அனுப்பினார்.
பாபாவே சொல்லிவிட்டார் என்ற சந்தோக்ஷத்தில் பையன் தேர்வு எழுதச் சென்றான். கேள்விகள் சுலபமாக இருந்தன. நன்றாக எழுதிவிட்டான். ஆனால் வாய்வழியாக கேட்கப்படும் தேர்வுக்குப்போக மட்டும் பயம். இதனால் தேர்வுக்குப் போகாமல் இருந்துவிட்டான்.
தேர்வு நடத்திய அதிகாரிக்கு பாபு வராமல் போனது ஆச்சரியமாக இருந்தது. பாபுவின் நண்பர் ஒருவரை அழைத்து, பாபு தேர்ச்சி பெற்றுவிட்ட விக்ஷயத்தைச் சொல்லி, வாய் வழி தேர்வுக்கு வராமல் நின்றுவிட்ட தற்கான காரணத்தைக் கேட்டு, அதில் கலந்து கொள்ளுமாறு சொல்லிஅனுப்பினார்.
நண்பர் வந்து சொன்னதும், அதிக சந்தோக்ஷம் அடைந்த பாபு, தாமதிக்காமல் வாய் வழித் தேர்வில் கலந்துகொண்டு, அந்த ஆண்டு வெற்றி பெற்றான்.
ஆகவே, என் அருமை குழந்தையே!
 நீ பாபாவின் மீது நம்பிக்கை வைத்து, சந்தேகப்படாமல் தேர்வை எழுது. பாபா வெற்றி தருவார். எழுதிவிட்ட தேர்வு முடிவைப் பற்றி கலக்கப்பட்டுக் கொண்டிருக்காதே. பாபா பார்த்துக்கொள்வார்.
அதற்காகத்தானே அவர் உனது இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கிறார். உனது வேலை அடுத்த தேர்வுக்குத் தயாராவது மட்டும்தானே தவிர, பயப்படுவது அல்ல. இந்த சரித்திர வார்த்தைகள் பள்ளிக்கூட தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என நினைத்துக் கொள்ளாதீர்கள், வாழ்க்கை என்ற பாடத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சோதனை என்ற பரீட்சைக்கும் பொருந்தும்.
சோதனை வரும்போது மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் எதிர்கொள்ளுங்கள். வருவது வரட்டும் என நினையுங்கள். பாபா பார்த்துக்கொள்வார். அவர் மீது முழுமையான நம்பிக்கையை மட்டும் வையங்கள். அனைத்தும் சுபமாக, சுகமாக முடியும்.
பிரார்த்தனை
சமர்த்த சத்குருவே, தேர்வுக்காகப் படிக்கிற இந்த வேளையில் அனைத்தையும் நினைவில் நிறுத்த, படித்தவை தேர்வில் வந்து, நான் நல்லமுறையில் எழுதி தேர்ச்சி பெற துணையிருக்குமாறு உம்மிடம் வேண்டிக் கொள்கிறோம். அருள் செய்வீராக.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...