சமர்த்த ராமதாசர் தனது இரு சீடர்களிடம் ஆளுக்கு ஒரு கோழியைக் கொடுத்து,
இதை யாரும் பார்க்காதபடி வெட்டி
எடுத்துவாருங்கள் என்றார்.
சீடர்கள் இருவரும் காட்டுக்குச்
சென்றனர். ஆளில்லாத இடமாகப் பார்த்து ஒரு சீடன் ஒரு கோழியைக் கொன்றான். இன்னொருவனோ
நாள் முழுக்கத் தேடிப் பார்த்துவிட்டு, அப்படிப்பட்ட இடமே இல்லை என்று சொல்லியபடி, கோழியுடன் குருவிடம் திரும்பினான்.
கோழியைக் கொன்ற சீடன், ‘ஐயா, இதை நான் கொல்லும்போது யாருடைய கண்களும் பார்க்கவில்லை’’ என்றான்.
அடுத்தவன், ‘‘ஐயா, என்னை இந்த மொத்த உலகமும் கவனிக்கிறது. என் கண்களே என்னை கவனிக்கின்றது. அப்படியிருக்க,
இந்தக் கோழியை எப்படி, எந்த இடத்தில் கொல்வது எனத் தெரியாமல் திரும்ப கொண்டுவந்துவிட்டேன்!’’ என்றான்.
இந்த பதிலைக் கேட்டு ராமதாசர்
மகிழ்ச்சி அடைந்தார். மகனே, இந்த
உலகம் முழுவதும், கடவுள் உட்பட
உன்னை கவனித்தபடியே இருக்கிறார்கள். யாரும் உன்னை கவனிக்க வில்லை என கவலைப்படாதே!’ அஜhக்கிரதையாக
இருக்காதே! என்று கூறினார்.
பாபா அடிக்கடி சொல்வார், ‘‘சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின்
ஓசையைக்கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை உடனே நான் பார்த்து விடுவேன்.
உன் செயல்கள் நல்லதாகவும், உனது
நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விக்ஷயங்களையும் நானே உடன் இருந்து
கவனித்துக் கொள்வேன்!’’ என்பார்.
நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக்
கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற விக்ஷயத்தைப் பற்றியோ கவலையே
படமாட்டோம்.
அனைத்தும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து அமைதியாக
இருப்போம். அமைதியாக, பொறுமையாக அனைத்தையும் கவனியுங்கள். கடவுள் உங்களை கவனித்து
வருகிறார்.
No comments:
Post a Comment