Friday, January 3, 2014

கடவுளும் குருவும் எதற்காக?

கர்மாவை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்றால் கடவுளும் குருவும் எதற்காக?

     கர்மா என்பது கடந்த காலத்தின் பயன்கள்.  போன ஜென்மத்தில் நாம் செய்தவற்றின் விளைவுகளை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம்.
     இருவர் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஒருவன் படித்தான். ஒருவன் ஏதோ வந்து போனான். படித்தவன் கலெக்டர் ஆனான். படிக்காதவன் இளநீர் விற்கிறான். அன்று படித்ததின் பலனை, படிக்காததின் பலனை இன்று அனுபவிக்கிறார்கள்.  இதுதான் கர்ம பலன்.
     அன்று இதன் அருமை தெரியவில்லை, மன்னித்து என்னை கலெக்டர் ஆக்கு கடவுளே என்றால் கடவுள் என்ன செய்ய முடியும்? நமக்கு கடவுள் நிறைய வாய்ப்புகளைத் தருகிறார். அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்வதைப் பொறுத்துத்தான் நம் கர்மா தீர்மானிக்கப்படுகிற்து. நன்மையும் தீமையும் நம்மிடம்தான் இருக்கிறதே தவிர கடவுளுக்கும் இதற்க்கும் சிறிதும் தொடர்பில்லை.
     இன்றைக்கு வேண்டுமானால் விடுப்பு எடுத்துக்கொள் ஆனால் நாளை வந்து நீதான் இந்த வேலையினை முடிக்கவேண்டும் என்று அலுவலகத்தில் சொல்வார்களே, அதுபோலத்தான் குருவருளால் நமது கர்மா சிறிது தள்ளிபோடப்டலாமே தவிர அதை ஒரு நாள் நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.

     குருவும் கடவுளும் நம் சுமைகளை சுமக்க உதவி செய்வார்கள். சுமை தெரியாமல் நடக்க வைப்பார்கள். நாம் களைப்படைந்தால் உதவி செய்து இளைப்பாற்றுவார்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...