Friday, February 7, 2014

மனிதப் பிறப்பெடுத்து என்ன பயன்?


ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது,  ஒரு விவசாயி தன்னுடன் தனது தோட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். போகும்போது தனது பசுவை ஓட்டி வந்து தோட்டத்தில் கட்டிவிட்டு, என் தாகத்திற்கு இளநீர் வெட்டித் தந்தார். பருகிக்கொண்டே நினைத்தேன், எப்போதோ ஊற்றிய நீரைக் குடித்த தென்னை, தாகத்திற்காகத் தான் சேமித்து வைத்த பயனான இளநீரைத் தந்தது. இதோ இந்த பசுவோ, நல்ல புல்லாகப் பார்த்து தன் வயிறு முட்ட மேய்கிறது. இதுவும் பாலாக, தான் அனுபவித்த பயனை பிறருக்குத் தந்துவிடுகிறது. ஓரறிவு உள்ள புல்லோ, தன்னையே பிறருக்காகத் தருகிறது. பகவானே, நான் மனிதப் பிறப்பெடுத்து என்ன பயன்? யாருக்கும் லாபமின்றி, சுயநலத்தோடு பிறரது சொத்துக்களை அனுபவிக்கிறேனே என நினைத்துக்கொண்டேன்.


சாயி வீரமணி,

சைதாப்பேட்டை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...