Sunday, October 13, 2013

சஞ்சல புத்தியுள்ளவனின் நிலை

சஞ்சல புத்தியுள்ளவனின் நிலை


       சஞ்சல புத்தியுள்ளவன் எதையும் எளிதில் நம்ப மாட்டான்.  கடவுளைக்கூட நம்ப மாட்டான்.  கடவுளை நம்பினாலும் கை மேல் பலன் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பான்.  அது கிடைக்காத போது உடனடியாக வேறு கடவுளைத் தேடி ஓடுவான் அல்லது வேறு மதத்திற்குத் தாவுவான்.
எங்கும் அதே நிலை என்பதை அறிந்த பிறகு அனைத்தையும் விட்டு விட்டு வெறுத்துத் திரிவான். அல்லது தற்கொலை போன்ற முயற்சிகளில் ஈடுபடுவான்.
எல்லாமே இருக்கிறது.  தேவைகளுக்கு அவசியமே கிடையாது என்று இருந்தாலும் கூட மனதில் அமைதியிருக்காது.  எதையோ பறி கொடுத்ததைப் போன்றஉணர்வு இருக்கும்.  தினமும் இதே எண்ணத்தில் தூக்கத்தைத் தொலைத்துவிடுவான்என்னவோ நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு கூறுகிறது என அடிக்கடி கூறுவான்.

இப்படிப்பட்ட நிலையில் இருந்தால் இன்று முதல் கண்டிப்பாக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...