Sunday, July 5, 2015

ஆப்பிள் குழந்தை பிறக்கும்!

ஷீலா நாகநாதன் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்குத் தொடர்ந்து வருபவர். தனது அக்காள் மகள் ரேவதிக்குத் திருமணம் தள்ளிப் போவதாகவும், பிரார்த்தனை செய்யவேண்டும் என்றும் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்தார்.
தாயார் மற்றும் சகோதரியை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருப்பதால் ரேவதிக்கு திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லை. சாயி வரதராஜனை தரிசித்தபோது,  “உனக்கு நல்ல மாப்பிள்ளை அமையப் போகிறான், உன் பேச்சைக் கேட்டு நடப்பவனாக இருப்பான், எனவே திருமணம் செய்துகொள். உனக்கு வரனும் உடனடியாகக் காத்திருக்கிறது”  என்றார்.
ரேவதியைப் பெண் பார்க்க ராஜேஷ் வந்தார்.  நல்ல குடும்பத்திலிருந்து வந்த நல்ல மாப்பிள்ளை. ரேவதிக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்தது. மாப்பிள்ளைக்குச் சென்னை யில் வேலை என்பதால், ரேவதிக்கு பெங்களூர் வாழ்க்கையைத் துறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
ரேவதி தினமும் பாபாவிடம் பிரார்த்தனை செய்து, தன்னை பெங்களூருக்கு அனுப்ப வேண்டினார். ராஜேஷ்க்கு சென்னையில் வேலை கிடைத்து, பெங்களூருக்கு மாற்றினார்கள். இதனால் ரேவதியின் விருப்பப்படி பெங்களூருக்கே குடியேறினார்கள்.
திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. பெருங்களத்தூர் வந்து சாயி வரதராஜனை ஆசி வேண்டினார். ஆப்பிளைக் கொடுத்து ஆசீர்வதித்து ”உனக்கு ஆப்பிள் போன்ற பிள்ளை பிறக்கும்!” என அனுப்பி வைத்தார். ரேவதி அழகான ஆப்பிள் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு ஸ்ரீமன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்போது ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டி ருக்கிற சமயத்தில் குழந்தையை சாயி வரதராஜனிடம் காண்பித்து ஆசி பெற்றார்கள். அந்தக் குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது ஆப்பிள். எந்தப் பழத்தைக் காட்டினாலும் ஆப்பிள் என்றே சொல்லுமாம்.
பாபாவின் பஜனை, பாடல்கள் என்றால் அந்தக் குழந்தைக்குக் கொள்ளையின்பம் ! பெரியவர்களைப் போல கைதட்டி, தலையாட்டி பஜனையில் ஈடுபட்டுவிடுகிறான். குழந்தை தனது பெற்றோர்களுடன் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து சாயி வரதராஜன் அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றது.
 சாயி வீரமணி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...