Thursday, July 2, 2015

மகான்களுக்கான இலக்கணம் என்ன?

மகான்களுக்கான இலக்கணம் என்ன?
( ஆர். காயத்திரி, கோயமுத்தூர்)
யாரைப் பார்க்க வேண்டும் என மனம் அடிக்கடி ஏங்குகிறதோ, யாரைப் பார்த்ததும் மனம் ஒரு முகப்பட்டு குவிகிறதோ, யாருடைய தரிசனம் கிடைத்த உடனே மனம் கனிந்து கண்களில் நீர் சுரக்கிறதோ அவர் மகான். இறைவன்.
ஒரு மகான் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட மாட்டார். யார் அவரைப் புரிந்துகொண்டவர்களோ அவர்களால் மட்டுமே அறியப்படுவார். யார் அவரை உணர்ந்தவர்களோ அவர்களுக்கே பரவச உணர்வு ஏற்படும். கண்ண பரமாத்மா கடவுள் என பாண்டவர்கள், பீஷ்மர் உட்பட பலர் நம்பினர், அவரை அவ்வாறு நம்பாதவர்களும் இருந்தார்கள்.
இயேசு கிறிஸ்து மகான் என்பதை உள்ளூர் மக்கள் நம்பவில்லை. ஒரு தீர்க்கதரிசி தனது ஊராலும், தனது மக்களாலும் புறக்கணிக்கப் படுவான் என அவர் கூறினார். இறைவனிடம் வேண்டும்போது, இந்த மக்களுக்காக என்னை அனுப்பினீர். ஆனால் அவர்களோ என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று கூறியிருப்பதை கவனியுங்கள்.
ரமணர் வந்தார். வள்ளலார் வந்தார். அவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்டர்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இவ்வாறே, பாபாவை பைத்தியக்காரன் என்றும், பக்கிரி என்றும், காசு ஆசைப் பிடித்தவன் என்றும், இன்னும் பலவிதங்களிலும் வசைபாடியவர்கள் அதிகம்.
ஆனால், அத்தகைய மக்களின் விமர்சனங்களைக்கடந்தும் அவர்கள் வாழ்கிறார்கள். இதுதான் மகான்களின் இலக்கணம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...