Sunday, July 5, 2015

பட்டினி பெருமாள்!

 vanamali
அடியார் ஒருவர் பெருமாள் கோயில் கட்டினார்.  தினமும் இரண்டு வேளை நைவேத்தியமாக வெறும் நீர்மோரும், இரவில் ஜீரண லேகியமும் படைத்து வந்தார். எதையும் சாப்பிடாமல் ஜீரண லேகியம் சாப்பிட்டு பெருமாள் இளைத்துப் போனார்.
கனவில் தோன்றிய பெருமாள், ”அப்பா, சாப்பாடு இல்லாமல் ஜீரண லேகியம் சாப்பிட்டு மிகவும் அவதிப்படுகிறேன். தயவு செய்து எனக்கு பழைய கஞ்சியை யாவது கொடு. எதற்காக இப்படிப் படுத்துகிறாய்?” எனப் புலம்பலுடன் கேட்டார்.
”பசி பட்டினி என்றால் என்ன என்பதை நீ புரிந்துகொள்ளவே இப்படிச் செய்தேன். உனக்கு வயிறார உணவு வேண்டுமானால், இங்கு வருகிற அத்தனை பக்தர்களும் செல்வந்தர்களாக வேண்டும். அப்படியொரு அனுக்கிரகம் செய்தால் நிச்சயமாக என் முடிவை மாற்றிக் கொள்வேன்என்றார் அடியார்.
”சரி, அப்படியே செய்கிறேன்.. என்றார் பெருமாள்.
”உன்னை நம்பமுடியாது. தினமும் இங்கு வரும் நூறு பக்தர்களை சோதித்துப் பார்ப்பேன். அவர்கள் பணக்காரர்களாக மாறிவிட்டால் நைவேத்தியத்தைக் குறைவின்றி படைப்பேன்!” என்றார் அடியார். தினமும் வரும் பக்தர்களைக் கண்காணித்து வந்தார் அடியார். ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த ஆலயத்திற்கு தொடர்ந்து வந்த 99 பக்தர்கள் செல்வந்தர்களாக மாறினார்கள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு பகவான் அடியார் கனவில் தோன்றி, ”நீ சொன்ன மாதிரி செய்தும், எதற்காக என்னை பழைய நிலையிலேயே வைத்திருக்கிறாய்?” எனக் கேட்டார்.
99 பேருக்குத்தானே செய்திருக்கிறாய்.. இன்னும் ஒரு ஆளுக்குச் செய்யவில்லையே?” எனக் கேட்டார்.
”நீ சரியாக எண்ணாவிட்டால் என்ன செய்வது? நான் சரியாகத்தான் செய்தேன்!” என்றார் பகவான். அடியார் பெயர்களையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டியபோது 99 பேர்தான் வந்தது. ஒரு பெயர் விடுபட்டிருந்தது. பகவானை முறைத்தார் அடியார். உடனே பகவான், ”அப்பனே, முதலில் உன் பெயர் அல்லவா இருக்க வேண்டும். என்னால் பணக்காரனான நீ உன் பெயரை மறந்துவிட்டாய். அதற்கு நான் என்ன செய்வது”  எனக்கேட்டார்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...