சில சாயி அடியார்கள், பிறரது
கர்மாவை தாங்கள் வாங்கிக்கொள்வதாக கதை அளக்கிறார்களே! இதைப் பற்றி தங்கள் கருத்தென்ன?
(பி.மகேஸ்வரி, உத்திரமேரூர்)
நீங்கள் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா?
அல்லது சூரிட்டி எனப்படும் ஜாமீன் தந்தது உண்டா? அப்படியிருந்தால் மட்டுமே இந்த விஷயத்திற்க்கான
பதில் உங்களுக்குப் பொருந்தும்.
ஒருவர் கடன் படுவதாக இருந்தாலும், இவருக்கு கடன்
தரலாம், அதற்க்கு நான் உத்திரவாதம் தருகிறேன் என வேறு ஒருவர் கையெழுத்து போடவேண்டும்.
கடன் வாங்கியவர் கட்டத் தவறினால், இவரிடம் கடனை வசூலிப்பார்கள். கடன் வாங்கி அனுபவித்தவன்
தப்பித்துவிட்டான், அனுபவிக்காமல் கையெழுத்து போட்டவன் மாட்டிக்கொண்டான் என்பதுதான்
கடன் பட்ட இடத்தில் ஜாமீன் போடுவது.
இப்படித்தான் அடியார்கள், இவனது கர்மாவிற்க்கு
நான் ஜாமீன் ஏற்கிறேன் என்பது. அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ கடவுளிடம் பிரார்த்தனை
செய்து, பாதிக்கப்பட்டவருக்கு நன்மை அளிக்கிறார்கள்.
நன்மையைப் பெற்றவன் நல்லவனாக இருந்து புண்ணியங்களைச்
செய்தால் பிரார்த்தனை செய்தவருக்கும், செய்யப்பட்டவருக்கும் நல்லது. இல்லாதபட்சத்தில்
பிரார்த்தனை செய்தவர் அந்தக் கர்மாவை ஏற்றுக்கொள்வது என்பது உண்மைதான். இதை பாபாவே
பிளேக் கட்டி போன்ற விஷயங்களில் நிரூபித்து இருக்கிறார். இயேசு கிறிஸ்துவினைப்
பற்றி சொல்லும்போது அவர் உலகத்தில் பாவங்களைச் சுமந்து தீர்த்த ஆட்டுக்குட்டி என்பார்கள்.
No comments:
Post a Comment