Skip to main content

பாபா செய்த அற்புதம்பாபா செய்த அற்புதம்திருப்பூரைச் சேர்ந்த கஸ்தூரி அம்மா, சாயி பாபா தனக்குச் செய்த அற்புதங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

என் பெயர் கஸ்தூரி.  கணவர் ஏகாம்பரம். பிள்ளைகள் ரங்கநாயகி, ராஜமாணிக்கம் ஆகியோருடன் திருப்பத்தூரில் எளிமையாகவும், திருப்தியாகவும் வாழ்ந்து வந்தேன்.

      துவக்கம் முதல் ஸ்ரீ ராகவேந்திரா பக்தை.  ராயரை வணங்காமல் எதையும் செய்யமாட்டேன்.  என் குடும்பமும் அப்படித்தான்.  எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது அடிக்கடி அவர்களை மந்திராலயம் அழைத்துச்சென்று வருவேன்.  அவரை கும்பிடாமல் வெளியே எங்கும் செல்லக்கூடாது என்பேன்.  நேரடியாக பலமுறை ராகவேந்திரரை தரிசனம் செய்திருக்கிறேன்.  என் பிள்ளைகளும் அவரை தரிசனம் செய்திருக்கிறார்கள்.  அத்தகைய ஆழ்ந்த பக்தியை அவர் மீது நாங்கள் கொண்டிருந்தோம்.

      என் மகன் பத்தாம் வகுப்பு கூட தாண்டமாட்டான் என்றனர்.  ராயரிடம் இவன் என் பிள்ளையல்ல, உன் பிள்ளை.  நீங்கள்தான் இவனை படிக்க வைக்க வேண்டும் என வேண்டுதல் செய்வேன். ராயரின் அருளால் என் மகன் பி.எச்.டி முடித்து பேராசிரியராக உள்ளான்.
     
      வியாழன் தோறும் விரதம் இருப்பேன்.  அன்று எதையும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருப்பது வழக்கம்.  துவக்கத்தில் பாபா மீது ஈடுபாடு ஏதும் கிடையாது.  படிப்படியாக அவர் மீது பக்தி வளர்ந்தது.  எப்போதும் அவரது திருநாமத்தையே சொல்லும் அளவு மனத்தை அவர் ஆக்ரமித்துக்கொண்டார்.  பாபா உதியினை சாப்பிடாமல் படுக்க மாட்டேன்.  அவரது திருநாமத்தினை உச்சரிக்காமல் எதையும் செய்வதில்லை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவரை அணு அணுவாக வணங்கி வருகிறேன்.

      எனக்கு சில மாதங்களுக்கு முன்பு...............                       (தொடரும்)

Popular posts from this blog

தடையை வெல்லும் தாரக மந்திரம்

அன்பான சாயியின் பிள்ளையே! தடைகள்என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிறவிசயம்.எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்து விடாமல், அடுத்த இலக்கைநோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும். அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானாவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம் மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும்தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும் என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார்.இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம், சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான். மனிதர்கள் போடும் தடைகள் மலைகள் அல்ல,
தாண்டுவதற்குச் சிரமமாக இருக்கும் என்று மலைத்து நிற்பதற்கு. அவையெல்லாம் மடை திறந்த வெள்ளத்தின் முன்னால் கையால் அள்ளிப் போடப்பட்டுள்ள மணல் குவியலைப் போன்றவை. உன்னை அவைதடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தைரியமாக நினைத்துக் கொள்.. சிந்தனையை ஒருமுகப் படுத்துதைரியத்தை வரவழை.. கோழைகளைப் போலகூப்பாடு போடாமல், செயலாற்றத் தயாராகு. தடை தளர்ந்து போகும்.
பாபா என்ன சொன்னார் தெரியுமா? நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப்பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை)உனக்குவேண்டா.…

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்


எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு அழகான துணியினால் மடித்து, பாபா புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன், ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில் வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது போல் , ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆக…

தடையை வெல்லும் தாரக மந்திரம்

அன்பான சாயியின் பிள்ளையே! தடைகள்என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்குஅழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம்.எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்துவிடாமல், அடுத்த இலக்கை நோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும். அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம்மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும்தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும்என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார். இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம்,சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான்.