Monday, January 21, 2013

உண்மை எது?




ஒரு முறை நீங்கள் கடவுள்தான் பாரத்தை சுமக்கிறார். அவர் மீது பாரத்தை வைத்துவிட்டு பேசாமல் இருங்கள் என்று கூறுகிறீர்கள்.  இன்னொரு முறை நீங்கள் எதையேனும் செய்தால் கடவுள் உடன் இருந்து அருள் பாவிப்பார் என்று சொல்கிறீர்கள்.  இது எனக்கு குழப்பமாக இருக்கிறது.  எது உண்மை?
(எஸ்.மகேஷ், வேலூர்)


     இரண்டுமே உண்மைதான்.  நீங்கள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்த போது அம்மா, ஆடு, இலை, ஈ, மரம், மாடு என்றெல்லாம் படம் காட்டி சொல்லிக் கொடுத்த்தார்கள்.  நீங்கள் பட்ட மேற்படிப்பு படிக்கிற காலத்திலும் இதையே காட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் சிரிக்க மாட்டீர்களா?

     இப்படித்தான் ஆன்மீகத்தில் நுழையும் முன் குழப்பத்தில் இருக்கும் ஒருவனுக்கு கற்பிக்கும் போது நீ செயல்படு, இறைவன் உடனிருப்பான் எனச் சொல்லித்தருகிறேன். அவன் மேல் நிலைக்கு வந்து விட்ட பிறகு எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என்பதை புரிய வைத்து, சுமப்பது நாமல்ல, அவன் தான்! நீ சும்மா இரு என காட்டிக்கொடுக்கிறேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...