பாபா செய்த அற்புதம்
திருப்பூரைச்
சேர்ந்த கஸ்தூரி அம்மா, சாயி பாபா தனக்குச் செய்த அற்புதங்களை இங்கே உங்களோடு
பகிர்ந்து கொள்கிற அனுபவத்தின் தொடர்ச்சி.......
இதன் முந்தைய
பகுதியினை படிக்க இங்கே
சொடுக்கவும்
எனக்கு சில
மாதங்களுக்கு முன்பு குடலிறக்க நோய் வந்தது.
வலி தாங்க முடியாது. எவ்வளவோ
மருத்துவ சிகிச்சைகள் பார்த்துவிட்டேன்..
எதுவும் சரியாகவில்லை. குடலிறக்கம்
வந்தால் ஹார்ட் அட்டாக் வரும் என்று பல்ர் பயமுறுத்தினார்கள். இப்படி அப்படி என ஐந்து லட்சம் செலவானதுதான்
மிச்சம். வேறு எந்த பலனும் கிடைக்கவில்லை.
ஒரு கட்டத்தில்
அறுவை சிகிச்சை செய்வதென முடிவு செய்து அப்பல்லோ மருத்துவ மனையினை அணுகினோம். டாக்டர் ரகுநாத் சிகிச்சை அளித்தார். அறுவை
சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரை செய்தார்.
திருப்பத்தூரில்
உள்ள சாயிபாபா கோயிலுக்குச் போவேன்.
பாபாவிடம், “யாருமற்ற அனாதையாக உள்ளேனே, என்னை ஏன் கஷ்டப்படுத்துகிறாய்?” என மனதிற்க்குள் புலம்பி அழுவேன். எட்டு
மாதங்களாக மரண அவஸ்தை. நோய் சரியாக
வேண்டும் என அனுதினமும் வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். இப்படித்தான் அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள
வேண்டிய நாளுக்கு முன் நாளும் பாபா கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு பூஜை
செய்யும் கார்த்திக் சாயிராம், ‘உனக்கு ஒன்றுமில்லை, எழுந்து போ” என்று கூறினார்,
அறுவைச்
சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு வந்தேன்.
ஐந்து நிமிடம் தான் அறுவைச்சிகிச்சை என்று டாக்டர் ஏற்கனவே டாக்டர்
கூறியிருந்தார். அதற்காகவா இத்தனை மரண அவஸ்தை என்று நினைத்தேன். வயிறை குறுக்காக
அறுத்து 52 தையல் போட்டனர். வலி
நின்றது. அறுவைச் சிகிச்சை செய்த நாள்
புதன். மறுநாள் வியாழன். ஏதாவது சிறிது சாப்பிட மருத்துவர்
அறிவுருத்தினார். எதையும் சாப்பிடாமல்
பட்டினி கிடந்தேன்.
சில
நாட்களுக்குப் பிறகு, அறுவைச் சிகிச்சை செய்த பகுதியில் குடல் அழுக
ஆரம்பித்தது. காலையில் ஒரு ஊசி, மாலையில்
ஒரு ஊசி என போடுவார்கள். அப்போதும் வலி
பொறுக்க முடியாமல் அழுவேன். நர்ஸ் எனது
வயிற்றுப்பகுதியினை சுத்தம் செய்ய கையினை விட்டால் முழு கையும் உள்ளே செல்லும்.
அந்தளவு பாதிப்பின் கொடிமை இருந்தது.
டாக்டரை
அணுகியபோது ஐம்பது சதவீதம்தான் என் கையில் இருக்கிறது. மீதி கடவுள் கையில்தான்
என்று சொன்னதுடன், அழுகிய குடல் பகுதியினை வெட்டிவிட வேண்டும் என்றார். பணம் போனதுடன் மன உளைச்சலும் சேர்ந்துகொண்டது.
இவ்வளவு
கடுமையான சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு பாபாவின் உதியினை சாப்பிட்டும், பூசியும்
வந்தேன். அற்புதமாக காயங்கள் விரைந்து
ஆறின. நானும் நலமானேன். நான் மருத்துவமனையில் படுத்த கையோடு என் பிள்ளைக்கும்
ஓர் அற்புத்ததினை பாபா செய்தார். இதை நான் சொல்வதைவிட அவனுடமே கேளுங்கள்.
திருமதி கஸ்தூரி
அவர்களின் மகன் திரு ராஜமாணிக்கம் தொடர்கிறார்.
(தொடர்ச்சி நாளை)
No comments:
Post a Comment