கடன்காரர்கள் திட்டுகிறார்கள்,
மானம் போகிறது, உயிரை விட்டுவிடலாம் என்று கூட நினைக்கிறோம். பாபா எதற்காக கடன் பிரச்சனையை தீர்க்க மாட்டேன்
என்கிறார்? சொல்லுங்கள்.
(கே.கோமதி, வேலூர் – 3)
பாபா உங்களை கடன் வாங்க சொன்னாரா? அல்லது அவரைக்
கேட்டு கடன் வாங்கினீரா? சீட்டுக் குலுக்கி
போட்டுப் பார்த்தேன் என்பதும், சத்சரித்திரத்தில் கை வைத்துப் பார்த்தேன் என்பதும்
சரியான முறையல்ல. நேரம் கெட்டுவருகிறது என்பதை
அடுத்தடுத்து வரும் சிறு சிறு தோல்விகளின் போது தெரிந்துக்கொள்ளலாம். இத்தகைய நிலையில்
நாம் தான் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவேண்டுமே தவிர கடனை அடைப்பதாக நினைத்தோ, தொழிலை
புதிதாகத் தொடங்க திட்டமிட்டோ கடன்படக்கூடாது.
எவ்வளவு கடன்பட்டாலும் அது விழலில் இறைத்த நீருக்குச்
சமமாகிவிடும். அடுத்து நமது கர்மாவை நாம் கடனாக,
நோயாக, பிரச்சனைகளாக சுமந்து தீர்க்கவேண்டியிருக்கிறது
என பலமுறை கூறியிருக்கிறோம். அடித்து உதைத்தாலும்
உங்களிடமிருந்து கடன் வசூலாகாது என்பது தெரிந்தும் கடன் கொடுத்தவர் திட்டுவது அவரது
இறுக்கமான மனத்தை ரிலாக்ஸ் செய்வதற்க்காக என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், அவர் ஒவ்வொரு
முறை திட்டும் போதும் ரிலாக்ஸ் செய்து கொள்கிறார் என நினைத்துக்கொள்வீர்கள், அவரும்
எவ்வளவுதான் திட்டினாலும் சொரணையில்லையே எனப் புலம்பி கடன் திருப்பி அளிக்கும் வரை
பொறுமை காப்பார். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி
கடனை அடைப்பதற்க்கு அவகாசமும் தருவார்.
No comments:
Post a Comment