Saturday, January 19, 2013

அமைதியாகவும் தெம்பாகவும் பரீட்சை எழுது




”நீ வெற்றி பெறுவாய், சோர்வு வேண்டா, அமைதியாகவும், தெம்பாகவும் பரீட்சை எழுது. பாபாவை முழுமையாக நம்பு என்று சொல்லவும்”
(சத்சரித்திரம் 29:11)


     மும்பையின் புறநகர்ப்பகுதியான பாந்த்ரா என்ற நகரத்தில் ரகுநாதராவ் தெண்டுல்கர் என்ற சாயிபக்தர் இருந்தார்.  அவரும், அவரது மனைவி சாவித்ரி, மகன்கள் அனைவரும் சாயி பக்தர்கள்.  அவர்களின் மூத்த மகன் பாபு மருத்துவம் படித்துக்கொண்டிருந்தான். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்பது அவனது லட்சியம். ஆனால் அவன் ஜோதிடரை அணுகி தேர்ச்சி பெறுவேனா என்று கேட்டான்.

     ஜோதிடர் பாபுவின் ராசி, நட்சத்திரம், கிரகங்கள் அமர்ந்திருந்த இடம் ஆகியவற்றைப் பார்த்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறுவாய்.  இந்த ஆண்டு கிரக நிலை சரியில்லை என்று கூறிவிட்டார்.  சிரமப்பட்டு படித்தது எல்லாம் வீணாகி விடப்போகிறதே, பின் தேர்வுக்குச் சென்று என்ன பயன் என்று பாபு மனம் உடைந்தான்.

     இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பாபுவின் தாயார் ஷிரடிக்கு பாபாவை தரிசிக்கச் சென்றார்.  பாபாவின் பாதங்களில் தலை வைத்து, ஜோதிடர் சொன்ன விஷயங்களை சொன்னாள்.
.

     இதைக்கேட்ட பாபா சொன்னார்: “நான் சொல்வதை மட்டுமே அவனை செய்யச் சொல்லுங்கள்.  ஜாதத்தை சுருட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டு, அமைதியான மனதுடன் பரீட்சை எழுதச் சொல்லுங்கள்.  வேறு யார் சொல்வதையும் கேட்கவேண்டாம். ஜாதத்தினை வேறு யாரிடமும் காட்ட வேண்டாம் என்றும் கூறவும். பையனிடம் நீ வெற்றி பெறுவாய், சோர்வு வேண்டாம், அமைதியாகவும், தெம்பாகவும் பரீட்சை எழுது.  பாபாவை முழுமையாக நம்பு என்று சொல்லவும்” எனக்கூறி அனுப்பினார்.

     பாபாவே சொல்லிவிட்டார் என்ற சந்தோஷத்தில் அந்த பையன் தேர்வு எழுதச் சென்றான்.  வினாத்தாளில் வந்த கேள்விகள் எல்லாம் சுலபமாக இருந்தன.  நன்றாக எழுதிவிட்டான்.  ஆனால் வாய் வழியாக கேட்கப்படும் தேர்வு அதாவது ஓரல் எக்ஸாம் போவதற்க்கு பயந்துக்கொண்டு, தேர்வுக்குப் போகாமல் இருந்து விட்டான்.

     தேர்வு நடத்திய அதிகாரிக்கு பாபு வராமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.  பாபுவின் நண்பர் ஒருவரை அழைத்து, பாபு தேர்ச்சி பெற்றுவிட்ட விஷயத்தைச் சொல்லி, வாய் வழி தேர்வுக்கு வராமல் நின்றுவிட்டதற்க்கான காரணத்தைக் கேட்டு, அதில் கலந்து கொள்ளுமாறு சொல்லியனுப்பினாள்.

     நண்பர் வந்து சொன்னதும், அதிக சந்தோஷம் அடைந்த பாபு, தாமதிக்காமல் வாய் வழித் தேர்வில் கலந்துக்கொண்டு அந்த ஆண்டு தேர்வும் பெற்றான்.

     ஆகவே, என் அருமைக் குழந்தைகளே!  பள்ளியில் வைக்கப்படும் தேர்வானாலும், வாழ்க்கையில் வைக்கப்படும் தேர்வானாலும், ஜோதிடமும், கிரகங்களும், நேரமும், காலமும், வாழும் சூழலும் உனக்கு சாதகமாக இல்லை என்று சொல்லப்பட்டாலும், அப்படியே இருந்தாலும் நீ சோர்வு அடையாதே!  பாபாவின் மீது நம்பிக்கை வைத்து சந்தேகப்படாமல் தேர்வை எழுது…

தடைகளை எல்லாம் கடந்து நீ நிச்சயமாக தேர்ச்சி பெறுவாய்.  பாபா வெர்றி தருவார். எழுதப்பட்ட தேர்வின் முடிவைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே.  பாபா பார்த்துக்கொள்வார்.  அதற்காகத்தேனே அவர் உன் இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கிறார். உனது வேலை அடுத்த தேர்வுக்கு தயாரவது மட்டுமே தவிர, அவர் சொன்னார், இவர் சொன்னார் என பயப்படுவது அல்ல.

ஜெய் சாய்ராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...