கிறித்த்வர்கள் இயேசு பிறந்த
நாளில் நட்சத்திரங்களைக் கட்டுகிறார்களே! அது ஏன்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
(கே.ஆர்.ராமமூர்த்தி, சென்னை
– 3)
இது நமது சமயத்தின் கோட்பாடுகளில் ஒன்று. இதை அறியாத கிறித்துவர்கள், ஏதோ இதனை தங்களது கண்டுபிடிப்பு
என நினைத்துப் பின்பற்றுகிறார்கள்.
நாம் ஒவ்வொருவர் பிறக்கும்போதும் அதற்கு அடையாளமாக
ஒரு நட்சத்திரம் தோன்றும் என்றும், நாம் மம் என்றும், நாம் மறையும் போது அதுவும் மறைந்துந்துவம்
என்றும் நமது நம்பினார்கள். மிகப்பெரிதாக மின்னுவது
புகழ் பெற்றவர்கள் என்பதற்க்கும், மிக மெல்லிதாக மின்னுவது சாதாரண மனிதர்களாக கருதப்பட்டார்கள். இதனால்தான் வானத்தில் எண்ணிக்கையற்ற நட்சத்திரங்கள்
இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு நட்சத்திரம் கீழே விழுந்தால் யாரோ ஒருவர் மரணமடைகிறார்
என்று சொல்வது இதனை ஒட்டித்தான்.
இயேசு கிறிஸ்து பிறந்தபோது மிகப் பெரிய வால் நட்சத்திரம்
தோன்றியதை கீழ்த்திசை நாட்டிலிருந்து மூன்று ஞானிகள் பார்த்து இவ்வளவு பெரிய நட்சத்திரம்
தோன்றியிருக்கிறதே…அப்படியானால் மிகப் பெரிய ஞானி ஒருவர் தோன்றியிருக்கிறார் என்பதை
உணர்ந்து , அதைப் பின் தொடர்ந்து சென்றார்கள் என்றும். ஜெருசலேம் நகரிலுள்ள பெத்லகேம்
என்ற ஊரில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்திருப்பதைப் பார்த்து
அவரை தொழுதார்கள் என்று பைபிள் கூறுகிறது.
நம்மில் புகழ் பெற்றவர்களைப் பார்க்கும் போது அவரை ஸ்டார் என்று கூறுவதும்,
அவரை சூப்பர் ஸ்டார் என்றும் கூறுவது இதனால்தான்.
குழந்தைக்கு ஈஸா என்று பெயர் சூட்டினார்கள். ஈஸா
என்றால் இறைவன் என்று பொருள். நமது ஈஸாவாஸ்ய
உபநிடத்தின் கோட்பாடுகளைத் தான் இயேசுக்கிறிஸ்து பின்பற்றினார் என்பதை ஆராய்ந்து பார்த்தால்
தெரியும்.
No comments:
Post a Comment