Sunday, January 20, 2013

ஆட்டுவித்தால் ஆடுகிறோம்



நீ செயல்புரியாமல் இருந்தால் போதும் பகவான் பார்த்துக்கொள்வார் என்கிறார்களே!  செயல் புரியாத போது பகவான் எப்படி பார்த்துக்கொள்வார்?  ஏதேனும் செய்யும் போது உதவியாகத்தானே கடவுளால் ஏதேனும் செய்ய முடியுமா?
(ஆர்.பரணீதரன், சென்னை-33)

செயல்புரியாமல் இரு என்பதற்க்கு சோம்பலாக இருக்கவேண்டும் என்பது பொருளல்ல.  கத்தி, கடப்பாரை, மண்வெட்டி, மென்பொருட்கள் என அனைத்தையும் பாருங்கள்.  யாராவது இயக்கினால் தான் இயங்குகிறது.  அதிலும் தேவையான நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது.  மற்ற நேரங்களில் அது அமைதி காக்கிறது.

இதைப் போல நம்மை கடவுள் ஆட்டினால் ஆடவேண்டும்.  அதாவது அவரது கையில் கருவியாக இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

நமது கடவுள்களின் கைகளில் ஆயிரமாயிரம் ஆயுதங்கள் இருப்பது போன்ற படங்களைப் பார்த்து இருப்பீர்கள்.  அந்த ஆயுதங்கள் எல்லாம் ஒவ்வொரு தன்மை உள்ளதாக இருக்கும்.  இதன் பொருள், நீ எப்படிப்பட்ட வல்லவனாக இருந்தாலும் சரி, கடவுளின் கைககளில் அடங்கியிரு என், கடவுளின் கைககளில் அடங்கியிரு என்பதேயாகும்.  அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தால் நடப்பதெல்லாம் அவனாலேயே நடக்கிறது என்பதையும் அறிவோம். இதன் மூலம் நாம் தானாக எதையும் செய்யவில்லை, யாரோ நம் பின்னாலிருந்து ஆட்டுவிக்கிறார்கள் என்பதையும் உணரலாம்.  

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...