சாயிராம்
சாய் என்பதை ஆங்கிலத்தில் SAI என்று எழுதுவோம். இதன் பொருள் SEE ALLWAYS INSIDE. அதாவது எப்போதும் அவரை உன் உள்ளே பார் என்பதாகும்.
சாயியின் மந்திரமாக ‘ஓம் சாயி - ஸ்ரீ சாயி
- ஜெய ஜெய சாயி - சத்குரு சாயி’ என்போம். இதன் பொருளைக் கவனிக்கலாம்.
ஓம் என்பதே பிரணவம். அதாவது படைப்பின் ஆதாரம். படைப்பின் ஆதாரக்கடவுள் என பிரம்மாவைக் கூறுவோம். சாயியே பிரம்மா, ஸ்ரீ என்பது அம்பாளைக் குறிக்கும். .அன்னையின் இயல்பு பிள்ளைகளைக் காத்தல். பாபாவே
அம்பாள் அல்லது அன்னை. தனது பக்தர்களைக் காப்பாற்றுபவர். ஜெய ஜெய என்பது அவர் ஜெயத்தைத் தருகிறவர் என்பது
பொருள். சத்குரு என்கிறோம். குரு என்றால் அறியாமையை நீக்குபவர் என்று பொருள். சத்குரு என்பவர் அறியாமையை நீக்கி ஆன்மாவை ஈடேற்றுபவர்
என்பதாகும்.
சாயியே நம்மை படைத்துக் காத்து வாழ்வில் வெற்றியினைத்
தந்து நமது அறியாமையினை நீக்கி ஆன்மாவினை ஈடேற்றுகிறார் என்பதாகும், ஆகவே சாயியை சரணடைந்து சகல நன்மைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
அனுபூதிச்சித்தர்
No comments:
Post a Comment