Saturday, June 13, 2015

உதியால் சீரடிக்குச் சென்றேன்!

சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் என் பெயர் சியாமளா. நான் புதுப்பெருங்களத்தூர் சீரடி சாயி பாபாவின் மீது பயங்கரமாக நம்பிக்கை வைத்துள்ளேன். நான் காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் உதியைப் போட்டுக் குடிப்பது வழக்கம்.
குருதேவர் சாயி வரதராஜனுடன் சீரடிக்கு அக்டோபர் மாதம் சென்று வருவதற்காக டிக்கெட் புக் செய்திருந்தேன். சீரடிக்குச் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என் இடுப்புப் பகுதியில் புண் வந்தது. மருத்துவரிடம் காண்பித்து மருந்து எடுத்துக் கொண்டேன்.
எனக்கு எப்போதாவது உடம்பு சரியில்லாவிட்டால் குருதேவர் அளிக்கும் பாhபவின் உதியைத்தான் உபயோகிப்பேன். ஆனால் இந்த முறை உதியைத் தடவினால் எங்கே அதிகமாகிவிடுமோ என்ற பயத்தில், உதியைப் புண்ணின் மீது தடவவில்லை.
இதனால் எனக்கு சீரடிக்குப் போகமுடியாதோ என் பயம் ஏற்பட்டு விட்டது. பாபாவிடம் பிரார்த்தனை செய்து, என்னை மன்னித்துவிடுங்கள், உதியின் மகத்தான மருத்துவ குணம் தெரியாமல் இப்படி செய்துவிட்டேன் என்று கூறி, அன்று இரவு உதியைத் தடவிக்கொண்டு படுத்தேன்.
மறுநாள் காலையில் பார்த்தபொழுது என்னுடைய வலி குறைய ஆரம்பித்தது. சீரடிக்குப்போகும்போது அந்தப் புண் இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட்டது. அன்றிலிருந்து எனக்கு உடம்புக்கு முடியாமல் போகும்போது மகத்தான மருத்துவ குணம் உடைய உதியை எடுத்துக் கொள்கிறேன்.
சியாமளா, மைலாப்பூர்


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...