ராமநவமித்
திருவிழாவின் போது சாயி பக்தர் நானா
சாகேப் நிமோன்கர், தனது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சீரடிக்கு வந்திருந்தார். அது அவர் உரிமம் பெற்ற
துப்பாக்கி. கையில் துப்பாக்கியோடு வந்தவரைப்பார்த்து,
”சரியான நேரத்தில்தான் வந்து இருக்கிறீர்கள். அவன் அந்த மூலையில்
உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.
அவனை சுட்டுத் தள்ளுங்கள்!” எனக்கூறினார்.
பாபா
காட்டிய பக்கத்தில் யாருமில்லை. நிமோன்கருக்குத் திகைப்பு. ஆனால் பாபாவின் வார்த்தையை மீறக்கூடாது என்பதால் இரண்டு முறை சுட்டார்.
இப்போது
பாபா சொன்னார். ”ஓ, அவன் இறந்துவிட்டான். இனிமேல் யாரையும்
சுடத் தேவையில்லை!”
பாபா
யாரை சுடச் சொன்னார், நிமோன்கர்
யாரை சுட்டார் என்பது கடைசிவரை யாருக்கும் தெரியாது.
No comments:
Post a Comment