பாபா
ஒருமுறை இவ்விதம் தெரிவித்துள்ளார்: ”பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுடலை பஞ்ச
பூதங்களின் ஆராதனைக்கே
பயன்படுத்தினால், அந்த பஞ்ச பூதங்களே
கருணையைப் பொழியும், தயைக் காட்டும். தூய
இதயத்தோடு அதனை ஆராதித்தால் பிரார்த்தித்தால் கடினமான கல்லும்கூட கரைந்து விடும். சிருஷ்டியை
ஆராதிக்க வேண்டும். சிருஷ்டியை தண்டனிட்டு வணங்க வேண்டும். சிருஷ்டியே தெய்வம். தெய்வமே சிருஷ்டி வடிவில்
உள்ளது. " இவ்வுரையை மெய்ப்பிக்கும் வகையில் சீரடியில் நடந்த சில நிகழ்வுகளைக்காணலாம்.
ஒரு
மாலை நேரம். சீரடியில் ஆகாயம் கரு
மேகங்களால் சூழப் பட்டு இருள் கவிழ்ந்து,
பலமான காற்று வீசி, பெருமழை
பெய்து கிராமம் நீரால் சூழப்பட்டது. மக்கள்
தத்தளித்தார்கள்.
வாழ்க்கை
துன்பத்திற்குள்ளாகியது. மிருகங்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு ஓட
ஆரம்பித்தன. மக்களோ மசூதிக்குள் ஓடிவந்தனர். மிருகங்களும் கூட மசூதிக்குள் தஞ்சம் அடைந்தன.
மக்கள்
வார்த்தைகளாலும், மிருகங்கள் தங்கள் கண்களாலும் வேதனையை வெளிப்படுத்தினார்கள். இதனைக் கண்டு
சீரடிநாதர் மசூதிக்கு வெளியில் வந்து சட்காவை கையில் ஏந்தி
நின்று, மேகத்தைப்பார்த்து மசூதி அதிரும் வண்ணம்
கர்ஜீத்தார்.
பஞ்ச
பூதங்கள் பாபாவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தன. உடனே மழை சற்று
நின்றது. சீரடி கிராமம் இயல்பு நிலைக்கு வர
ஆரம்பித்தனர். மக்களும், விலங்குகளும் பாபாவுக்கு நன்றி கூறினர்.
மற்றொரு
முறை பகல் நேரத்தில் மசூதியில்
துனியலிருந்து தீ சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தீ கூரையின்
கழிகளை எரித்துவிடும் விதத்தில் இருந்தது. மசூதியிலிருந்த பக்தர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கலாம்
என்றனர்.
இந்தப்
பரிதாபமான நிலையில், சாயீசன் தன்னை ஆராதிப்பவர்களின் இரங்கலை அக்னி
கேட்காமல் போகுமா? எனக்கூறி தன் சட்காவை தரையில்
அடித்து, இறங்கு, இறங்கு! சாந்தமாக
இரு! என்று
கூறவும், துனியிலிருந்து
மேலே ஏறிய சுவாலை தணிந்து துனியில்
மட்டும் எரியும் நிலைக்கு வந்தது.
இந்த
நிகழ்ச்சிகள் மூலம் பாபா பஞ்சபூதங்களின்
ஆராதனையை நமக்கு விளக்கியுள்ளார். கால தர்மத்தை காலம்
செய்துகொண்டே செல்லும். நிற்காது. அதுபோல வாழ்க்கையில் கஷ்டமும், துக்கமும் வராமல்
இருக்காது. வரும். பவுதீக துன்பங்களுக்கு
பயந்து உள்ளிருக்கும் சக்தியை மறந்து விட்டால் எப்படி?
அந்த சக்தியை ஆராதிக்க வேண்டும். தேவையான சக்தியைப் பெற
வேண்டும்.
பொறுமையுடன்
அவற்றை சகித்துக் கொள்ள வேண்டும். அவற்றை
வெல்ல வேண்டும். இறைவன் எனக்காகவே இருக்கிறான் என்ற விசுவாசத்தை
மேம்படுத்திக் கொண்டால் அதுவே, ”ஆத்ம
விசுவாசம்” எனப்படும். இந்த விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டில் அது
அகங்காரமாகும்.
நம்
ஆத்ம விசுவாசத்திலேயே இறைவன் இருக் கிறார். பாபா
தன் பக்தர்களுக்குக் கூறுவதெல்லாம், ”நீ ஆத்ம விசுவாசியாக
இரு, உன்னை
நம்பு, உன் இறைவனை நம்பு. உன் விசுவாச
மார்க்கத்திலேயே இறைவனைக் காணலாம்!”. இதை சாயி பக்தர்கள்
நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.
குரு
கோலப்பின் அடியவரான முலே சாஸ்திரி, பாபாவை முதலில்
ஒரு முஸ்லிமாக நினைத்தவர், பாபாவே சாஸ்திரியின் குருவான
கோலப்பாவின் வடிவில் காட்சி அளித்து அருளினார்.
இதைப்போலவே
நமது மனம் சலனமின்றி ஸ்திரம் அடைந்து,
தேகத்தையும், மனதையும், புத்தியையும் ஒரே ஆபத்பாந்தவரான சாயியின்
திருவடிகளில் சர்ப்பித்து, அவரையே
நம்பி விசுவாசம் வைத்தால் நம் கவலை, பிணிகளில் இருந்து
விடுதலை பெறலாம். சாயி தரிசனம் - பாவ விமோசனம்.
பெருங்களத்தூர்
தியான மண்டபத்தில் பல அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து வருவதை
நாம் அறிவோம். சாயி நாதர் தன்
அடியவர்களை தாய்ப்பறவை தன் குஞ்சுகளை இறக்கைகளின்
அடியில் வைத்துக் காப்பதைப் போல காப்பாற்றுவார்.
பஞ்ச
பூதங்களை ஆராதித்துத் தன் கட்டுக்குள் வைத்திருந்த நம் குருவை,குருவே சரணம், சாயி
சரணம், சீரடி வாசா சரணம் என்று
எப்பொழுதும் சரணாகதி அடைந்து நினையுங்கள். அமைதியையும்
நற்பேற்றையும் அடையுங்கள்.
சாயி
குப்புசாமி, ஆதம்பாக்கம், சென்னை.
No comments:
Post a Comment