Wednesday, June 17, 2015

பாபா கொடுத்த உயர்வு!



நாங்கள் மைலாப்பூரில் குடும்பத்துடன் வசிக்கிறோம். சாயி பக்தர்களான நாங்கள் எல்லாவற்றுக்கும் பாபாவை மட்டுமே சார்ந்திருக்கிறோம். சாயி தரிசனம் பற்றியும் புதுப்பெருங்களத்தூரில் நடக்கும் கூட்டுப்பிரார்த்தனை பற்றியும் கேள்விப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு எனது கணவரும் நானும் குழந்தையுடன் வந்தோம்.
என் கணவருக்கு வேலையில் பணி உயர்வு தடைபட்டுக் கொண்டே வந்தது. பதவி உயர்வுக்காகத்தான் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டோம். குருதேவர் எங்களுக்கு பிரார்த்தனை செய்து, இந்த முறை நிச்சயமாக பதவி உயர்வு கிடைக்கும் என ஆசி வழங்கினார்.
எனது கணவரிடம் ”சீரடிக்குச் சென்று வரலாம்” எனக் கேட்டேன்.  பதவி உயர்வு வரட்டும், நிச்சயம் செல்லலாம்” என்றார்.
”இல்லை, நான் அதற்கு முன்பு பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் சார்பாக நடத்தப் படுகிற யாத்திரையில் குரு தேவருடன் சென்று பாபாவிடம் உங்களுக்காக வேண்டிக்கொண்டு வருகிறேன்என்று கூறி சீரடிக்குப் புறப்பட்டேன்.
சாயி தரிசனம் முடிந்த பிறகு சகூரி, நீம்காவன், குசால்சந்த் இல்லம், ரேணுகா தேவி மந்திரா, சனி சிக்னாப்பூர் போன்ற இடங்களை தரிசித்துக்கொண்டு, பூனா அருகிலுள்ள மகாகணபதி கோயிலுக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு போன் வந்தது.
என் கணவர் அந்த முன்னிரவு நேரத்தில் போன் செய்து,  “எனக்கு வேலையில் பணி உயர்வு கிடைத்து விட்டது. இந்தத் தகவலை குரு தேவருடன் பகிர்ந்து கொள். அவருக்கு என் நமஸ்காரத்தைத் தெரிவி எனக்கூறினார்.
சீரடியில் வேண்டுதல் வைத்து, வீட்டுக்கு வருவதற்கு முன்பாகவே எனது பிரார்த்தனையை பாபா நிறைவேற்றி விட்டார் என அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
பாபாவிடம் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் பிரார்த்தனை செய்தால், நாம் வேண்டியதை பாபா நமக்கு அருள் செய்வார் என்பதை முழு மனதோடு நம்புகிறேன்.
 யாமினி பாய், மைலாப்பூர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...