Wednesday, December 25, 2013

சத்சரித்திர பாராயணம் செய்தால் பரிசு கிடைக்கும்


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் சுரங்கம் ஒன்று ஏ என்ற பிரிவில் சீனியர் கிரேடு ஆபரேட்டராக பணிபுரியும் எனது பெயர் யு.எஸ்.எஸ்.மணி.
     சிறு வயதிலிருந்தே எனது தாத்தாவிடமிருந்து சீரடி சாயி விக்கிரகத்திற்க்கு வியாழன் தோறும் பால் அபிஷேகம் செய்து வழிபடுவேன். எனது மனைவி பெயர் சொர்ணலதா. எனக்கு இரண்டு மகன்கள் ஷியாம் மற்றும் சாயீஸ்.
     எனது முதல் மகன் சாயியின் கருணையால் மூன்றாம் வருட இஞ்சினியரிங் படிக்கிறான்.  இரண்டாவது மகனுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவேண்டும் என்று சாயியிடம் பிரார்த்தனை செய்து வந்தேன்.
     குடும்ப நண்பர் சாய் சம்பத்ராஜ் அவர்களிடம் சாயி சத்சரிதத்தினை பெற்று பாராயணம் செய்ய ஆரம்பித்தேன்.  பாராயணம் செய்ய ஆரம்பித்த மூன்றே நாட்களில் சாயியின் கருணையால் எனது மகன் சாயீஸுக்கு காரப்பாக்கத்திலுள்ள ஒரு சிறந்த கல்லூரியில் கட்டணம் ஏதுமின்றி விளையாட்டு வீரருக்கான பிரிவில் இடம் கிடைத்த்து.
     இதனால் நாங்களும் எங்கள் குடும்ப நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.  சத்சரித்திரப் பாராயணம் செய்ததன் பலன்தான் இந்தப் பரிசு எனத் திடமாக நம்புகிற நாங்கள் விரைவில் சீரடி சென்று பாபாவிற்க்கு நன்றிகளைக் காணிக்கையாக செலுத்தவுள்ளோம்.

     ஜெய் சாய்ராம்!


யு.எஸ்.எஸ்.மணி., சீனியர் கிரேடு ஆபரேட்டர்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
நெய்வேலி 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...