Thursday, December 5, 2013

நமது சிந்தனைக்கு – சாயிசரித்திரத்திலிருந்து - 3









       அஞ்ஞானமே பேதமனைத்திற்கும் மூலகாரணம். இக் காரணம்பற்றியே குருவிடம் சென்று சிறந்த ஞானத்தை சம்பாதித்துக்கொள்ள வேண்டும். 
             அஞ்ஞானம் நிவிர்த்தியாகிவிட்டால் 'பல உண்டு’ என்னும் பேதபுத்தி அணுவளவும் மீதி இருக்காது. 'உள்ளது ஒன்றே’ என்ற ஞானத்தைப் பெற்றவன் ஜனனமரணச் சுழ­­லிலிருந்து விடுபடுகிறான். ஆயினும், மிக அற்பமான அளவிற்குப் பேதக் கருத்தை வைத்திருந்தாலும், அவன் ஜனனமரணச் சுழ­ல் மாட்டிக்கொள்வான். சிருஷ்டியும் விநாசமும் அவனை விடாது தொடரும்.
 
       ஆன்மீக மேன்மை அளிக்கும் ஞானமே கட்டாயமாக அடையவேண்டிய மெய்யான ஞானம். எது கேவலம் உலகவாழ்வில் உழலுதல் அளிக்கிறதோ அதற்கு அஞ்ஞானம் என்று பெயர். 
             மனித வாழ்க்கையின் மிகப் பெரிய பயம் மரணம்பற்றியதுதான். இந்த பயத்தி­ருந்து விடுபட்டு பயமற்ற நிலை பெறுவதற்கு 'உள்ளது ஒன்றே’ என்ற அத்வைத ஞானத்தை அளிக்கும் குருவின் இருபாதங்களையும் கெட்டியாகப் பற்றிக்கொள்ளவேண்டும். 
             எங்கு 'இரண்டுண்டு’ என்னும் பிழையான கருத்து நுழைகிறதோ அங்கு பயமும் நுழைந்துவிடும். ஆகவே, பேதம் பாராத குருவின் திருவடிக்கு சேவை செய்தால் பயமென்பது லவலேசமும் இருக்காது. 
         தூய அன்பு என்னும் சந்தனத்தை அவருடைய நெற்றியில் இடுங்கள். எளிமையான விசுவாசம் என்னும் பீதாம்பரத்தை அவருக்கு ஆடையாக உடுத்துங்கள். அவர் உலகையே ஆடையாக அணிந்த இறைவனைத் தம் பக்தர்களுக்குக் காட்டிக்கொடுப்பார்.
 
        அஷ்டபாவ நிலையில் பெருகும் கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டுங்கள். திடமான சிரத்தையென்னும் சிம்மாசனத்தில் அவரை எழுந்தருளச் செய்யுங்கள். அவர் உடனே முகம் மலர்வார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...