'என்னுடைய நாமத்தைத் தியானம் செய்; என்னிடம் சரணடைந்துவிடு’ என்று பாபா எல்லாரிடமும்
திரும்பத் திரும்பச் சொன்னார். தம்மை யாரென்று தெரிந்து கொள்வதற்காகத் தம்முடைய கதைகளைக்
கேட்டு அவற்றின்மீது சிந்திக்கச் சொன்னார்.
சிலரை பகவந்நாமஸ்மரணம் செய்யச் சொன்னார்.
சிலரை பகவானுடைய லீலைகளைக் கேட்கச் சொன்னார். சிலரை பகவானுடைய பாதங்களுக்குப் பூஜை
செய்யச் சொன்னார். இவ்வாறு அவர் பக்தரின் ஆன்மீகத் தகுதிக்கேற்றவாறு வெவ்வேறு விதிகளையும்
வழிமுறைகளையும் நியமனம் செய்தார்.
ஒருவரை அத்யாத்ம இராமாயணம் படிக்கச் சொன்னார். மற்றொருவரை சடங்கை முன்வைத்து
ஞானேச்வரி படிக்கச் சொன்னார். வேறொருவரை ஹரிவரதம் படிக்கச் சொன்னார். இன்னொருவரை குருசரித்திரம்
படிக்கச் சொன்னார்.
ஒருவரைத் தம்முடைய காலடியிலேயே கிடக்கச் சொன்னார். அச்சமயத்திலேயே அடுத்தவரை
கண்டோபா கோயிலுக்கு அனுப்பினார். வேறொருவர்
மீதிருந்த அளப்பரிய அன்பினாலும் அக்கறையாலும் அவரை ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்யவைத்தார்.
ஒருவர் 'ராம விஜயம்’ படிக்கும்படி உபதேசம் செய்யப்பட்டார். மற்றொருவருக்கு நாமத்தினுடைய
மஹாத்மியமும் தியானத்தினுடைய முக்கியத்துவமும் விளக்கப்பட்டது. வேறொருவர் சாந்தோக்கிய
உபநிஷதத்தையும் கீதா ரகசியத்தையும் விசுவாசத்துடன் படித்து சுவாரசியத்தை
அனுபவிக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டார்.
ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீக்ஷை அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா.
சிலருக்கு நேருக்கு நேர் உபதேசம். சிலருக்கு
உருவகக் கதைகள் மூலமாக உபதேசம். அவருடைய
உபதேசப் புதினம் அபூர்வமானது.
அனைத்து இனத்தினரும் ஜாதியினரும் அவரை தரிசனம் செய்ய ஓடிவந்தனர். குடிப்பழக்கத்திற்கு
அடிமையான ஒருவரின் கனவிலும் அவர் தோன்றினார். அவருடைய
மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும் கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய
கைகளைக் காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவைத் தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேனென்றும்
பிரமாணம் செய்தபின்னரே அவரை விடுதலை செய்தார்.
கயாண வீட்டுச் சுவரில் ஜோதிடர்கள் விஷ்ணு, சிவன், ஆகிய தெய்வங்களின் ஓவியங்களை
வரைவதுபோல 'குருர் பிரம்மா’ போன்ற மந்திரங்களை பக்தருக்காக அவருடைய கனவில் பாபா எழுதுவார். யாராவது
யோகாசனங்களையோ அல்லது ஹடயோகத்தின் மற்றப் பயிற்சிகளையோ திருட்டுத்தனமாகப் பழகினால்,
பாபாவுக்கு அது உள்ளுணர்வால் தெரிந்துவிடும்; சொல்லம்பினால் அதை அவருக்குத் தப்பாது
தெரிவித்துவிடுவார்.
முன்பின் தெரியாத ஒருவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, 'நீ சோளரொட்டியைத் தின்றுவிட்டுச் சும்மா இருக்கமாட்டாயா? பொறுமையைக் கடைப்பிடி.’ என்று கண்டனச் செய்தி சொல்லுவார்.
முன்பின் தெரியாத ஒருவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, 'நீ சோளரொட்டியைத் தின்றுவிட்டுச் சும்மா இருக்கமாட்டாயா? பொறுமையைக் கடைப்பிடி.’ என்று கண்டனச் செய்தி சொல்லுவார்.
தோரணையில் சொன்னார், ''நாங்கள் கண்டிப்பு மிகுந்த,
இரக்கமில்லாத ஜாதி. ஓரிரு முறை சொல்லிப்பார்ப்போம்.
திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம்.
எம்முடைய சொல்லைக் கேட்காதவனை இரண்டாகத்
துண்டித்துத் தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக
இருப்பினும் சரி.” (பிறந்தவுடனே சிசுவின் தொப்புள் கொடியை
அறுத்துவிடும் செய்கை இங்கு உவமானப்படுத்தப்படுகிறது.)
No comments:
Post a Comment