நமக்கு ஞானக்கதைகள் ஏதும் வேண்டா. இந்த ஸாயீயின் போதியே (தினமும் பாராயணம்
செய்யும் நூலே) நமக்குப் போதுமானது. எத்தனையோ பாவங்கள் நம் தலையில் இருந்தாலும் சங்கடங்களிருந்து
விடுவிப்பவர் அவரே.
தினமும் முழுமையாகப் பாராயணம் செய்யமுடியாவிட்டாலும், குருபக்தி சம்பந்தப்பட்ட அத்தியாயங்களையாவது தினமும் காதால் கேட்டு இதயத்தின் ஆபரணமாக அணிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நாளின் எப்பகுதியிலாவது தினமும் இந்தச் சரித்திரத்தைப்
படிப்பவருக்கு ஸ்ரீஹரி குரு ராஜருடன் சேர்ந்து காட்சி அளிப்பார்.
அகண்டமாக இச் சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்தியவாசம்
செய்வாள். ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படிப்பவர்களின் தரித்திரம்
பறந்தோடும்.
இவ்வாறு நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டா. ஏனெனில், என் சொல் உங்களுக்கு ஐயங்களை விளைவிக்கலாம். என்னுடைய
வாய்மூலமாக ஸாயீயே இதைச் சொல்கிறார். ஆகவே, இது விஷயத்தில் அனாவசியமான கற்பனைகளையும் சந்தேகங்களையும் தூக்கியெறியுங்கள்.
சத்சரித்திரம்: அத்: 37- 94-98
No comments:
Post a Comment