Wednesday, December 11, 2013

பாபாவின் சத்சரித்திரத்திலிருந்து


        ''நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும் இந்த தேசத்திலும் வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லேன். ஒளியுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்திருக்கிறேன். மூன்றரை முழம் உயரமுள்ள இம் மனிதக்கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவதற்காகவே நான் இப்புவியில் அவதரித்திருக்கிறேன்.  என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான். வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்றுவிடலாம். கடல், அலைகளைப் பிரிந்துவிடலாம். கண், கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னி­ருந்து வேறுபடமாட்டான். ஜனனமரணச் சுழ­லிலி­ருந்து நிச்சயமாக விடுபடவேண்டுமென்று உறுதியாக நினைப்பவன், தர்மசாஸ்திர விதிகளின்படி வாழ்க்கை நடத்தப் பிரயத்தனம் செய்யவேண்டும். எப்பொழுதும் தனக்குள் அடங்கிய மனத்தினனாக இருக்கவேண்டும்.  பிறர் மனத்தைப் புண்படுத்தவோ தாக்கவோகூடிய சொற்களைப் பேசக்கூடாது. எவரையும் மர்மஸ்தானத்தில் அடிக்கக்கூடாது. தன்னுடைய கடமையையே கருத்தாகக்கொண்டு, சுத்தமாக சுயதர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.  உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு. அவ்வாறான மனிதன், தனது தேத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுபற்றிக் கவலைப்படமாட்டான். அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை. எவனொருவன் வேறொன்றிலும் நாட்டமில்லாது என்னையே வரித்து, என்னுடைய புண்ணிய கதைகளைக் கேட்டுக்கொண்டு, என்னில் அன்னியமான எதிலும் ஈடுபாடு கொள்ளாதிருக்கின்றானோ, அவன் இறைவனுடன் ஒன்றிவிடுகிறான்.” 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...