Tuesday, December 31, 2013

ஞானிகளின் அவதாரம்

                   ஸச்சிதானந்தமும் ஆனந்தத்தின் இருப்பிடமுமாகிய நீரே பிறவிப்பிணியின் இன்னல்களால் அவதியுறும் மக்களுக்கு சுகத்தின் ஆதாரம். உம்முடைய அத்வைத போதனை மந்தபுத்திக்காரனுடைய மனத்தி­ருந்துங்கூட துவைத மாயையைப் போக்கிவிடுகிறது.

                 
உம்மை எங்கும் நிறைந்தவர் என்றும் ஆகாயத்தைப்போல விஸ்தாரமானவர் என்றும் விவரித்தது மட்டுமல்லாமல், அனுபவத்திலும் கண்டவர்கள் தெய்வ அனுக்கிரஹம் பெற்றவர்கள்.

             
ஸாதுக்களை ஸம்ரக்ஷணம் செய்வதற்கும் துஷ்டர்களை வேரோடு நாசம் செய்வதற்குமே இறைவன் பூமியில் அவதாரம் செய்கிறான்.

             
ஞானிகளுடைய அவதாரம் அதனினும் மேன்மையானது. ஞானிகளுக்கு ஸாதுக்களும் துஷ்டர்களும் சமானமே. ஒருவனை உயர்ந்தவனென்றும் மற்றொருவனை ஈனமானவன் என்றும் வித்தியாசப்படுத்த அவர்களுடைய இதயம் அறியாது. ஞானிகளுக்கு இருவரும் சரிசமானமே.

             
ஒரு நோக்கில் பார்க்கும்போது, இறைவனைவிட ஞானிகள் உயர்ந்தவர்கள். தீனர்களின் மேலுள்ள பிரேமையால், முத­ல் அவர்கள் தருமமார்க்கத்தி­ருந்து வழிதவறியவர்களை மீண்டும் தருமநெறிக்குக் கொண்டுவருகிறார்கள்.

             
ஸம்ஸார ஸாகரத்திற்கு ஞானியர் ஓர் அகத்திய முனிஅஞ்ஞான இருளுக்கு ஞாயிறு. பரமாத்மா இவர்களிடமிருந்து வேறுபட்ட வஸ்து இல்லை; இவர்களிடமே வசிக்கிறார்.

          
என் ஸாயீ இவர்களில் ஒருவர். பக்தர்களின் க்ஷேமத்திற்காகவே இப்புவியில் அவதரித்திருக்கிறார். அவர் ஞானதேவரின் அவதாரம்; இறைவனோடு ஒன்றுபட்ட  நிலைபெற்றவர்.

              
ஜீவராசிகள் அனைத்தையும் அவர் தம்முடன் ஒன்றியனவாக நினைத்தாலும், இதர விஷயங்களில் அவர் பற்றற்றே விளங்கினார். ஒன்றை விரும்பியும் மற்றவற்றின்மேல் பற்றற்று இருந்தாலும், எல்லாவற்றையும் விரோதபாவமின்றி சமமாகவே பார்த்தார்.

              
சத்ருபாவமும் இல்லை; மித்ருபாவமும் இல்லை; ஆண்டியையும் அரசனையும் ஸமமாகவே நடத்தினார். மஹானுபாவரான ஸாயீ இவ்விதமாகவே இருந்தார்.


ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...