![]() |
சீரடி குருஸ்தான் |
நீம்காங்வ் என்ற இடத்திற்குச் செல்கிறோம். அங்கே ஒரு வேப்பமரமும் பாழடைந்த
வீட்டினுடைய இடிபாடுகளும், புதிய ஒரு கோயிலும் காணப்படுகிறது. இதில் என்ன
சிறப்பு என நினைக்கலாம். இந்த வீட்டின் உரிமையாளர் பெயர் திரியம்பக டேங்க்லே,
இவர் ஆங்கில அரசு
சார்பில் மக்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையுள்ள ஜாகீர்தாராக இருந்தவர். இவர் வம்சத்தில் பிறந்த பாபா சாகேப் என்பவர்
மீது பாபாவுக்குப் பிரியம் அதிகம் என்பதால், சீரடியிலிருந்து கால்நடையாகவே நடந்து வந்துவிடுவார். நாள் முழுக்க அவருடன் பேசிக்
கொண்டிருப்பார். பாபா சாகேப்பிற்கு ஒரு தம்பியிருந்தார். அவர்
பெயர் நானா சாகேப். புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தார். இரண்டாவது மனைவியை
மணந்த பிறகும் புத்திர
பாக்கியமில்லை. எனவே, தம்பியை சாய்
தரிசனத்திற்காக சீரடிக்கு அனுப்பி
வைத்தார். பாபா அருளால் அவருக்கு மகன் பிறந்தான்.
இதற்குப்பிறகு தான் பாபாவின்
புகழ் வளர ஆரம்பித்தது. மக்கள் கூட்டம்
கூட்டமாக சீரடிக்கு வந்தார்கள்.
நானா சாகேப் அகமத் நகரில் அரசு வேலை
பார்த்துக்கொண்டிருந்தார். செல்வாக்கு மிக்க இவருக்கு நடந்த அற்புதத்தைப் பற்றி
கேள்விப்பட்டவர்கள் சீரடிக்கு வர ஆரம்பித்தார்கள். நானா சாகேப் தன்னுடன் வேலை
பார்த்த சக அதிகாரிகளுக்கும், அவர்களுடைய காரிய
தரிசிகளுக்கும் கடிதம் எழுதி பாபாவை வந்து தரிசிக்குமாறு கூறினார்.
இப்படி நிறையப் பேர் பாபாவை
தரிசனம் செய்தார்கள். இதன் மூலமாகத்தான் சீரடி
வளர ஆரம்பித்தது. 1912-க்குப்
பிறகுதான் சீரடியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. பக்தர்கள் பெருகினர்.
No comments:
Post a Comment