Monday, August 8, 2016

கீரப்பாக்கம் பாபா ஆலயம்

கீரப்பாக்கம் பாபா ஆலயம் நீங்கள் இதுவரை கண்ட பாபா ஆலயங்களில் இருந்து வித்தியாசமானது. அங்கே பூசாரிகள் யாரும் கிடையாது. நடை சார்த்த வேண்டும் சீக்கிரம் கிளம்புங்கள் எனக் கூறுவோர் கிடையாது. பாபாவை இப்படி வழிபடுங்கள் எனக் கூறுவோருமில்லை. பாபாவை தொடலாம், தொடக் கூடாது என்ற கட்டுப்பாடும் கிடையாது.
வடநாடுகளில் உள்ளது போன்ற வழிபாட்டு முறை இங்கே பின்பற்றப்படுகிறது. உங்களால் முடிந்தவரை பாபாவைத் தொட்டு வணங்கலாம், அவருக்கு நைவேத்தியம் படைக்கலாம். காலையில் சென்றால் அபிஷேகம் செய்யலாம். ஆடை உடுத்தலாம்.
இந்தக் கோயில் உங்கள் கைங்கர்யத்தால் உங்களுக்காக உருவாக்கப்பட்ட கோயில். ஆத்மார்த்தமாக வந்து வேண்டிக் கொள்வோரும், தனியாக அமர்ந்து பாபாவிடம் பேச விரும்புவோரும் பலன் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட கோயில்.
கோயிலுக்கு அடுத்த கட்டிடத்தில் அரிசி போன்ற பொருட்கள் தயாராக உள்ளன. பசி எடுத்தால் நீங்களே சமைத்து சாப்பிடலாம்; இல்லாவிட்டால் கோயிலை நிர்வாகம் செய்கிற ரவி ரங்கர், முன்னாள் தாசில்தார் சம்பந்தம், அவருடைய மகள் பிரேமா ஆகியோர் அருகில் இருப்பார்கள். அவர்களிடம் கூறி உங்கள் தேவையைப் பூர்;த்தி செய்து கொள்ளலாம்.
இந்த ஆலயம் 2013 டிசம்பர் மாதம் உருவானது. முதலில் இருந்த ஷெட் அகற்றப்பட்டு தற்போது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கழிப்பறைகள் உள்ளன.
ஓய்வு எடுக்க அன்னதானக் கூடத்தை நீங்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். சென்னை புதுப்பெருங்களத்தூரை தலைமையகமாகக் கொண்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ அறக்கட்டளை இதை உருவாக்கியுள்ளது.  விடுமுறை நாட்களிலும், சுற்றுலா போகும் போதும் இதை தரிசித்துச் செல்லலாம்.
சீரடி செல்வதற்கு முன்பு சாயி பக்தர்கள் பலர் இந்த ஆலயத்தில் வழிபட்டுச் செல்கிறார்கள். வேறு எந்த பாபா ஆலயத்திலும் தேங்காய் உடைக்க அனுமதி கிடையாது. இங்கே அதுவும் உண்டு என்பதால் பக் தர்கள் வந்து செல்கிறார்கள். இது தவிர, சபரி மலைச் செல்லும் சாயி பக்தர்களும் இங்கு வந்து சுவாமிக்கு விளக்குப் போட நெய்யை சமர்ப்பித்து தேங்காய் உடைத்து வேண்டிக்கொண்டு செல்கிறார்கள்.
ஆலயம் எப்போதுமே திறந்திருக்கிறது என்றாலும் மலைப்பகுதியில் தனிமையாக இருப்பதால் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணிக்குள் வந்து தரிசனம் செய்துவிட்டுப் போவது நல்லது.
தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் வழியாக 55 டி என்ற பேருந்து செல்கிறது. இது தவிர கேளம்பாக்கம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கண்டிகை வழியாகத்தான் செல்கின்றன. கண்டிகையில் இறங்கி பேருந்து மாறிக் கொள்ளலாம்.
பேருந்து நேரம்: தாம்பரத்திலிருந்து
காலை 5.15, 6,1,0 7,2,0 8.1,0 9.3,0 10.3,0 11.4,0 12.3,0 1.35, 2.4,0 3.2,0 4.45, 5.3,0 6.55, 7.4,0 8.45
கீரப்பாக்கத்திலிருந்து தாம்பரம் செல்ல
காலை 6.15, 7.1,0 8.25, 9.15, 10.35,11.25, மாலை 3.4,0 4.25, 5.5,0 6.05, 8.4,0 9.50.
இடைப்பட்ட நேரத்தில் கீரப்பாக்கத்திலிருந்து மினி பேருந்துகள் செல்கின்றன. ரவி சங்கரை தொடர்பு கொண்டாலும் ஏற்பாடுகள் செய்து தருவார்.
அவருடைய தொலைபேசி் 9710205032

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...