Friday, August 5, 2016

விதுர நீதி சொல்வது…….

எவன் ஆபத்துக் காலங்களில் கலங்குவது கிடையாதோ, கவனத்துடன் செயல் புரிந்துகொண்டே இருக்கிறானோ, சமயம் நேரும்போது துக்கத்தையும் பொறுத்துக் கொள்கிறானோ அவனுடைய விரோதி அழிந்துவிடுகிறான்.
எவன் காரணம் இன்றி வெளிநாட்டுக்குச் செல்வது இல்லையோ, பாவிகளுடன் சேர்வது இல்லையோ, பிறன் மனைவியை ஏறெடுத்துப் பார்ப்பதில்லையோ, செருக்குக் கொள்வதில்லையோ, திருட்டு, கோள் சொல்லுதல், கள் குடித்தல் இவற்றை செய்யாமல் இருக்கிறானோ அவன் எப்போதும் சுகமாயிருக்கிறான்.
உறுதியான புத்தியுடன், செய்யத் தக்கது, செய்யத் தகாததை நிச்சயம் செய்து, சாமம் பேதம், தானம், தண்டம் இந்நான்கு உபாயங்களால் நண்பர், பகைவர், நட்பு பகை இரண்டும் அற்ற அயலார், ஆகிய எல்லோரையும் வசப்படுத்த வேண்டும்.
வித்தாலும் ஆயுதத்தாலும் ஒருவன் தான் கொல்லப்படுகிறான். கெட்ட எண்ணங்களால் பலருக்கு அழிவு ஏற்படுகிறது. பொறுத்தருள்தல் மனிதனுக்கு மிகச்சிறந்த பலம். வலிமையற்றவர்களுக்குப் பொறுமை ஒரு நற்குணம் ஆகும். திறமை சாலிகளுக்கு அது ஓர் அணிகலன்.
எவனுடைய கையில் பொறுமை என்னும் வாள் இருக்கிறதோ, கெட்டவர்கள் அவனுக்கு எந்த விதக் கெடுதலையும் செய்யமுடியாது.
தான் செய்த தீய செயல்களை பிறர் அறியாமல் போனாலும் கூட தனக்குத் தானே அது பற்றி வெட்கம் கொள்கிறானோ, அவன் கெட்ட கர்மங்கள் விலகி சென்று விடுகின்றன. அவனுக்கு அமைதி கிடைக்கிறது.
பணம் இரண்டு தகாத வழிகளில் செலவழியக் கூடும். ஒன்று தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல், மற்றொன்று நல்ல தகுதியுடையவர்கட்குக் கொடுக்காமல் இருத்தல்.
அன்புடையவன், பணிவிடை செய்பவன், நான் உன்னைச் சார்ந்தவன் என்று அடைக்கலம் புகுந்தவன் ஆகியோரை ஒரு போதும் கைவிடக்கூடாது.
நான்கு விக்ஷயங்கள் விரைவிலேயே பலன் தரும். அவை தேவதைகளை தியானிப்பதால் மனோரதம் பூர்த்தியாகும். அறிவாளியின் நுட்பமான அறிவினால் ரகஸ்யமான விவரங்கள் தெரியவரும். அறிர்களின் பணிவை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர்.
பாவத்தைத் துறப்பதால் மனதில் சாந்தி ஏற்படுகிறது.
அக்னி ஹோத்ரம், பேசா நோன்பு, வேதாத்யயனம், யாகம் இவை தற்பெருமைக்காகச் செய்யப்பட்டால் மாறான பலன்களைத் தரும்.
தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள், பிச்சைக்காரர்கள், விருந்தினர் இந்த ஐவரையும் தினமும் பூஜிப்பவன்
மிகுந்த மரியாதைக்கு உரியவன்.
காமம், கோபம், சோகம், மோகம், மதம், பெருமை என்கிற இவை ஆறும் எவனிடத்தில் கட்டுப்பட்டு உள்ளனவோ அவன் புலன்களை வென்றவன்.
எவர் பிறரது மேன்மையைக் காணப் பொறுப்ப தில்லையோ, மகிழ்ச்சி கொள்வதில்லையோ, சினம் கொள்கிறார்களோ, எவரிடத்திலும் நம்பிக்கை, எவர் பிறரை நம்பியே வாழ்கிறாரோ, எவர் பிறரை வெறுக்கிறார்களோ, அவர்கள் எப்பொழுதும் துயரம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
அந்தணர்களை வெறுத்தல், அவர்களிடம் சண்டையிடுதல், செல்வத்தை பிடுங்கிக்கொள்ளுதல், கொல்ல விரும்புதல், அவர்களை இகழ்தல், அவர்களை மறந்துவிடுதல், அவர்கள் எதையாவது ஏற்க வரும் போது அவர்களுடைய குறைகளைக் கூறுதல், அவர்களைப் புகழ்ந்து பேசுதலை ஏற்றுக் கொள்ளாமல் இருத்தல் ஆகிய எட்டும் இனி நேரப் போகும் அழி வைக் குறிக்கின்றன.
குடியர்கள், புலன் இன்பத்தில் கருத்துடையோர், மனநோய் பிடித்தவர், களைத்துப் போனவர்;, சினம் மிக்கவர்;, பசியாக இருப்பவர்;, ஆவல் கொண்டவர்கள், பேராசைப் பிடித்தவர்;, கோழை, காமம் மிகுந்தவர் இவர்கள் அறத்தின் நுட்பத்தை அறிந்துகொள்ள இயலாதவர்கள். ஆகவே, இவர்களுடன் ஒருபோதும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...