திருவாய் மொழிகளை பின்பற்று பாபாவால் சுகம் கிடைக்கும்!

குரு செய்யும் செயல்களை நாம் காப்பியடிக்கக் கூடாது. அவருடைய திருவாய் மொழியைத் தான் பயபக்தியுடன் பின்பற்ற வேண்டும்.
குருவின் திருவாய்மொழியாக வெளிவந்த சொற்களை மனதில் நிலைநிறுத்தி அறிவுரையை எப்பொழுதும் சிந் தனை செய்து கொண்டிருங்கள். அதுவே உமது ஆன்மீக ஏற்றத்திற்குக் காரணமாக அமையும்.
இக்கருத்தை நிரந்தரமாக மனத்தில் இருத்துங்கள். குருவின் சொற்களே போதியும் புராணமும்ஞ அவையே அவற்றுக்குத் தெளிவுரையும் விரி வுரையும் ஆகும். முக்கி யமான உபதேசத்தை தியானம் செய்யவேண்டும். ஏனெனில், அதுவே நமது வேத ஞானம்.
எந்த ஞானியின் சொற்களையும் அவமதியாதீர்! நம் தாய் நம்மை கவனித்துக் காப்பாற்று வதுபோல, வேறு எவர் நம்மைக் காப்பாற்றுவார்? -அத்: 45

நாம் பாபாவை வணங்கினாலும் வேறு தெய்வத்தை வழிபடுவதாகக் கூறினாலும் சனா தன தர்மப்படியே வாழ்கிறோம். இந்த தர்மம் குரு வழி பாட்டின் மீது கட்டப்பட்டுள்ளது. இறைவன் குருவாக அவதரித்து உபதேசித்தவைகளே வேதங்களாக, சாஸ்திரங்களாக, நீதி நூல்களாக நமது நடைமுறை வாழ்க்கையாக அமைந்துள்ளன.
இறைவன் வானத்திலிருந்து எந்த நீதியையும் கொட்டிவிடவில்லை. மண்ணில் இறங்கி வந்து குரு வாய் அமர்ந்து குரு மார்க்கமாக உபதேசித்து, அருளிச் சென்றிருக்கிறான். ஆகவேதான் அவனை சத்குரு அதாவது பரம குருவாக வழிபடுகிறோம். குருவே அனைத்திற்கும் மூலம் எனக் கருதுகிறோம். எதையும் குரு மூலமாகவே பெற வேண்டும் என நினைக்கிறோம்.
குருவிடமிருந்து பெறும்போது அவரது பலனையும் சேர்த்துப் பெறுகிறோம். நான் நூறு முறை மந்திரத்தை ஜபித்தேன். எனது குருவோ கோடி முறை ஜபித்தவர். அவரிடம் மந்திரம் பெற்ற பிறகு, நான் ஒருகோடியே நூறு முறை மந்திரம் ஜபித்த பலனுக்கு சொந்தக்காரன் ஆகிறேன். இந்த உண்மையை உணர்ந்துதான் குரு முகமாக மந்திரங்களைப் பெற்றார்கள்; பெற வழி செய்தார்கள்.
சாயி பக்தராக இருக்கும் பலரை பாருங்கள், அவர்கள் சாயி பாபா போல உடை உடுத்தி, தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள். பாபா தட்சணை கேட்பது போல கேட்கிறார்கள். அதாவது அவரது செயல்களை அப்படியே காப்பியடிக்கிறார்கள். அவர் என்ன உபதேசித்தார், அவருடைய திரு வாய் மொழி என்ன என்பது பற்றி யாருக்குமே அக்கறையில்லை.
எந்த பாபா ஆலயத்திலாவது பாபா இப்படி வாழ்ந்தார், இன்ன சொன்னார், இப்படி நீங்கள் செய்யுங்கள் எனக் கற்பிக்கிறார்களா? கஷ்டம் எதற்காக வருகிறது., இதை எப்படி போக்க இயலும் என சொல்லித் தருவது உண்டா? உலக வாழ்க்கை எதுவரை? அதற்கு அப்பால் எது உள்ளது என யாராவது போதனை செய்து பார்த்தது உண்டா? அவருடைய திருவாய் மொழிகளை தியானம் செய்யப் பழக்கியது உண்டா?
எதுவும் இல்லாத இடத்தில் என்னத்தைப் போய் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?
பாபா ஆலயம் உள்ளது, பாபா இருக்கிறார். பார்த்து வணங்கி வருகிறோம். அவ்வளவுதான்! இந்தளவு பேசுகிறவர்கள் ஆன்மிகத்தை நோக்கி நடக்கிறவர்கள் கிடையாது. உலக சுகத்தினை மட்டும் பெறுவதற் காக சாயி பாபாவை அணுகுகிறவர்கள். இவர்களுக்கு கஸ்டமர் என்று பெயர். இவர்களுக்காக பாபா  கோயில் கட்டி வைத்திருக்கிறவர் தரகர். அங்கே கமின் வியாபாரம்தான் நடக்கும்.
ஒரு சாயி பக்தர், பாபாவின் போதனை என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவரால் நாம் பெற்ற அனுபவங்கள் எப்படி உள்ளன என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
எதுவுமே தெரியாமல் சாயியை வணங்குவது உலக சுகத்தை மட்டுமே தரும். மோட்சத்தை நமக்குத் தராது. அதைப் பெறுவதற்கு பலப் பல பிறவிகளை எடுக்கவேண்டியிருக்கும்.
சத்சரித்திரம் இருபத்தேழாவது அத்தியாயம் கூறுகிறது் சாயி பாபாவுக்கு எத்தனையோ பக் தர்கள் இருந்தார்கள். ஆனாலும் காபர்டே, புட்டி, நூல்கர் இம்:வரைத் தவிர மற்றவர்கள் எவரும் பாபா சன்னிதியில் மவுனத்தைக் கடைப் பிடித்தார்கள் அல்லர்.
மற்றவர்கள் அனைவரும் பாபாவிடம் உரையாடினர். சிலர் பயமோ பக்தியோ இன்றி வாதாடவும் செய்தனர். இவர்களில் மூவர் மாத்திரம் சன்னிதியில் மவுன விரதமாக இருந்தனர்.
காபர்டே புகழ்பெற்ற வக்கீல். சட்டசபையில் கேட்பவர் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடியவர். அவர் பேச்சைக் கேட்டால் மக்கள் வசப்படுவார்கள். சிறந்த பேச்சாளர் எனப் பெயர் எடுத்தவர். அப்படிப்பட்ட நபர் சாயியின் முன்னால் பேச்சற்று அமைதியாக இருப்பார்.
புட்டி மாபெரும் செல்வந்தர். மிகப் பெரிய படிப்பாளி. நூல்கரும் அப்படியே. ஆனால் இவர்கள் பேசமாட்டார்கள்.
ஏன்?
பேச்சு ஆன்மிகத்தை வளர்க்காது. பாபாவிடம் வீண் விவாதம் செய்வதால் தனக்கு ஆன்மிக உணர்வு வளராது. கேள்வி கேட்காமல் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலே போதும் மற்றவை தாமே அமைந்துவிடும் என்ற அளவில் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
குருவின் திருவாயிலிருந்து மலரும் வார்த்தைகள் நமக்கு நன்மை செய்யும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
அத்தியாயம் 24-ல் மனிதன் அடையக் கூடிய
நான்கு பேறுகளான அறம், பொருள்;, இன்பம், வீடுபேறு ஆகிய அனைத்தும் குரு சேவை செய்து அவர் மீது பக்தி செய்வதால் வந்துவிடும் என்கிறது.
நாம் எதிர்பார்க்கிற குருவானவர் இந்திரஜாலம் செய்யக்கூடியவராக இருக்கவேண்டும். மந்திர சக்தியால் மாங்காயைக் கொண்டுவரவேண்டும் என்பது. இது சரியானது அல்ல. கேவலம் இந்திர ஜாலம் செய்பவன் தன் வசீகர சக்தியால் ஓர் எலும்பை அசைத்துப் பொருட்களை சிருஷ்டி செய்வதுபோல் நமக்குக் காட்டி வயிறு வளர்க்கிறான் (24: 67)
இது ஆன்மிகமல்ல. முழுமையான பலனையும் தராது. அந்த நேரத்திற்கு வேண்டுமானால் நமக்கு திருப்தியைத் தரும். ஆனால் சாயி பாபா என்கிற நமது குரு மேலானவர்; பரப்பிரும்மம். அவருடைய வார்த்தைகள் சுத்த ஞானத்தைத் தருகிறது. அற உணர்வை உண்டாக்குகிறது; பொருளைத் தருகிறது; வரும் பொருளால் இன்பம் மட்டுமே விளையும் நிலையை உண்டாக்குகிறது. வீடு பேற்றுக்கான வழியையும் காட்டுகிறது.
நீங்கள் யாரை குருவாக ஏற்றாலும் அவரது வழி காட்டுதல் இப்படித்தான் இருக்க வேண்டும். அவர் ஒரு கருவியாக- வழியாக உங்களுக்கு இருக்க வேண்டும். அவர் வாயி லாக பக்தியை, நம்பிக்கையை, அற்புதத்தை அடைய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாவிடின் அத்தகைய குருவை நீங்கள் ஒதுக்குவது நல்லது.
ஏற்கனவே கூறியிருக்கிறேன், குருவின் மீது பக்தி செய்து அவரது திருவாய் மொழிகளை மனதில் ஏற்று பூரண விசுவாசத்துடன் அவரது திருவடிகளில் சரண் அடைந்துவிட்டால் உங்களது பாரம் எல்லாம் அவர் ஏற்றுக் கொள்கிறார். பூரணமான விடுதலையை நமக்குப் பரிசாகத் தருகிறார்.
நீங்கள் ஒரு கோயிலுக்குப் போய் பாபாவை தரிசனம் செய்கிறீர்கள். என்ன தோன்ற வேண்டும். இவர் நமக்கு அனுக்கிரகம் செய்யத் தயாராக ஆர்வத்துடன் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். நாம் அவருடைய திருவாய் மொழிகளைப் பின் பற்றி பண்பட்ட நிலமாக மாறிக்கொள்ள வேண்டும். அவரது பாதங்களில் நிரந்தரமாக மனதை நிலை நிறுத்தி அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்க வேண்டும்.
இது யாருக்கு கைகூடும் என்றால் பக்தி பாவனை உள்ளவர்களுக்கு கைகூடும். பக்தி பாவனை என்பது அவர் மீது அன்பு செலுத்தி நம்பிக்கையுடன் வழி படும்போது மனம் உடைந்து கண்ணீர் விடுகிறார் களே அவர்களுக்கு சாத்தியமாகும். மற்றவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.
- சாயி வரதராஜன்

Powered by Blogger.