மகனே., மகளே .. நீ மேன் மேலும் வளர்ந்து, வளர்ச்சியடைய
போகிறாய். யார் யாரெல்லாம் உன்னை வெறுத்தார்களோ, யார் யாரெல்லாம் உன்னை உதாசீனப்படுத்தினார்களோ, யார் யாரெல்லாம் உன் நம்பிக்கையை கெடுத்தார்களோ, அவர்களைப்பற்றி இனி ஏதும் கவலைப்படாமல் இரு.
நான் இருக்கிறேன், கோபம் வேண்டாம்.
தினம் தினம் நீ வழிபடும் என்னையே, திருடன் பைத்தியக்காரன் பிச்சைக்காரன் வழிப்போக்கன் என்று பலரும் சொல்லவில்லையா?.. அதற்கு நான் பொறுமையாக இல்லையா?. நீயும் காத்திரு.. உனக்கு
வரும் அனைத்தையும் நான் ஏற்பேன்.. என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. எவரும் எதையும் நாடமுடியாது...
கலங்காதே அனனத்தும் பொடிப்பொடியாகப் போகிறது.. கண்களை மூடிக்
கொள்ளாதே... என் நாமத்தை உச்சரிக்கும் உன் மனம் தெளிவாகும்.. இழந்ததை மீண்டும் பெறப் போகிறாய்... உன்னை நாடி
வரும் நேரம்.. பிரிந்தவர் சேரும் நேரம்.. காத்திரு உனது கைகள் பல பேர்க்கு உதவும்
நேரம்.. என் பக்தனுக்கு குறைகள் ஏற்படாமல் பாதுகாப்பேன் ..."
No comments:
Post a Comment