Sunday, August 27, 2017

பாபா கைவிட மாட்டார்!



இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சாயி கதையைக் கேட்டும், அற்புதங்களைக் கேட்டும் என்றாவது ஒருநாள் சீரடி செல்லவேண்டும் என்பதை லட்சியமாகவே கொண்டிருந்தேன்.
2009ல் தீராத வயிற்றுவலி, காய்ச்சல் என அவதிப்பட்டேன். 20 நாட்களுக்குப் பிறகு காமாலை முற்றிவிட்டதாகவும், பித்தப் பையில் கல் இருப்பதாகவும் உடனடியாக அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை என்றும் அறியப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பாபாவைப் போலவே காட்சியளித்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது உருவம் மறைந்து நிஜமான டாக்டர் உருவம் தெரிந்தது. விரைவில் குணமடைந்து, ஒரே மாதத்தில் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசித்து வந்தேன்.
இரண்டாவது முறையாக பாபாவின் அருளை ரயில் பயணத்தின்போது உணர்ந்தேன். சென்னையிலிருந்து என் பெண் வீட்டுக்கு கணவருடன் புறப்பட்டேன். புறப்படும் முன்பு ரயில் நிலையத்தில் ஸ்ரீ சாயி தரிசனம் புத்தகத்தை இரண்டு வாங்கினேன். என் மகளுக்காக ஒன்று.
ரயிலில் அமர்ந்த சிறிது நேரத்தில் எல்லோரிடமும் பயணச் சீட்டைச் சரிபார்த்தபடி வந்த டிக்கெட் பரிசோதகர், ஒரிஜனல் சீட்டு இல்லாதவர்களிடம் அபராதம் வசூலித்துக் கொண்டு வந்தார்.
அப்போதுதான் நாங்களும் ஒரிஜனல் கொண்டு போகாத தவறை உணர்ந்தோம். ஆனால், அபராதத்தொகையைக் கட்டவேண்டியிருக்குமே என்ற பயம் ஏற்பட்டது. என் கணவர் புலம்பினார். சாயிராம், தெரியாமல் ஆதார் அட்டை கொண்டு வராமல் விட்டுவிட்டோம். என் பொருளாதார நிலையில் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டும் சக்தி என்னிடம் இல்லை.. காப்பாற்று என வேண்டினேன்.
சாயி தரிசனம் புத்தகம் வடிவில் பாபா என்னுடன் வரும்போது அபராதம் கட்ட விடமாட்டார் என உறுதியாக நம்பினேன். எங்களை பரிசோதித்த டி.டி., எங்களிடம் ஒரிஜனல் இல்லை என்பதை அறிந்து, இனிமேல் இந்தத் தவறை செய்யாதீர்கள் என எச்சரித்து எங்களை விட்டு அகன்றார்அதன் பிறகு எந்தத் தொல்லையும் இல்லாமல் சுகமாகப் பயணித்துச் சென்று வந்தோம்.
என். பானுமதி நடராஜன், சென்னை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...